அடேங்கப்பா.. சென்னையில் ரூ.1000 கோடி சொத்துகள் பறிமுதல்!! தொழிலதிபரிடம் அதிரடி காட்டிய ED!!
சென்னை தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் 1000 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் 1000 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமும், அவரது கணவர் ஆறுமுகம் மற்றும் அவர்களுக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். மொத்தம் 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை நடவடிக்கைகளின் போது, பல்வேறு குற்றஞ்சாட்டக்கூடிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள், மொத்தமாக ரூ. 1000 கோடி மதிப்புள்ளவை கைப்பற்றப்பட்டன. மேலும் ரூ. 912 கோடி மதிப்புள்ள நிலையான வைப்புத் தொகை (FDRகள்) மற்றும் மியூச்சுவல் பண்ட்களும் முடக்கப்பட்டன.
ஆண்டாள் ஆறுமுகத்திற்குச் சொந்தமான RKM Powergen Private Limited நிறுவனம் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கணக்கில் வராத சொத்துக்கள் குறித்தும், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாகவும் ஆண்டாள் ஆறுமுகத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: திமுகவிற்கு அடுத்த அதிர்ச்சி; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம்!
இதையும் படிங்க: “மதுரையில் மற்றொரு பாபர் மசூதி பிரச்சனை”... அரசு விளக்கத்தால் அதிர்ந்த நீதிபதிகள் - காவல்துறைக்கு அதிரடி உத்தரவு!