×
 

சேகர் ரெட்டி உறவினருக்கு ஸ்கெட்ச் போட்ட அமலாக்கத்துறை; 7 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை!

காட்பாடி அருகே சாய் சுப்ரபாதம் ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை

சாய் சுப்ரபாதம் ஹோட்டல் உரிமையாளர் மேத்தா கிரி வீட்டில் இன்று காலையில் இருந்து தொடர்ந்து ஏழு மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மேத்தா கிரி பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

காட்பாடி அடுத்த தொண்டன்துளசி பகுதியில் உள்ளது பிரபல தொழிலதிபரும் சாய் சுப்ரபாதம் ஹோட்டல் மற்றும் ஆங்கர் கேன்டீன் உரிமையாளருமான மேத்தா கிரி ரெட்டி என்பவரது வீட்டில்5 பேர் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர் மேத்தா கிரி  இல்லத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: முக்கிய புள்ளிகளுக்கு செக்..! சென்னையில் பல இடங்களில் ED ரெய்டு..!

மேலும் அவருக்கு சொந்தமான காட்பாடி பாரதி நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திலும் அதிகாலை சோதனை நடைபெற்றதாக  கூறப்படுகிறது . இந்த சோதனையானது வருமான வரித்துறைக்கு சரியாக வருமான வரி செலுத்தாமல் பணத்தை பதுக்கி வைத்திருந்ததாகவும் அந்த பணத்தை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அவரது அலுவலகத்தில் பயோமெட்ரிக் லாக் இருப்பதால் முழுவதுமாக சோதனை நடத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த அலுவலகத்தில் உரிமையாளரை வரவழைத்து சோதனை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது. திடீரென வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மேதகிரியின் காரை சோதனை மேற்கொண்டனர்

 

இதையும் படிங்க: மிரட்டல், உருட்டல்களுக்கு எல்லாம் திமுக பயப்படாது! பாஜகவை நேரடியாக தாக்கிய வைகோ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share