இடைத்தேர்தல் வெற்றி..! மாஸ் காட்டிய தவெக..! முதல்வர் முன்னிலையில் பதவி ஏற்கும் புதிய எம்எல்ஏக்கள்..!
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர்.
தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் ஒன்று இன்று தொடங்குகிறது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் இன்று சட்டப்பேரவையில் பதவியேற்கின்றனர். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் இன்று சட்டப்பேரவையில் உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் ஏற்க உள்ளனர்.
இதனால் ஆளுங்கட்சியின் பலம் மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்கள் இவர்கள் இருவரும். மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்தியபாமாவும் வெற்றி பெற்று எம்எல்ஏக்களாகப் பதவியேற்றனர். ஆனால் தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இதனால் அந்த இரு தொகுதிகளும் காலியாகின. இதையடுத்து தேர்தல் ஆணையம் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தலை நடத்தியது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெற்றது.இடைத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் முடிவுகள்.. விசிகவை தாழ்த்திக் காட்ட முயற்சி..!! பகீர் திருமாவளவன் குற்றச்சாட்டு!!
மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் சுமார் இருபதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரைத் தோற்கடித்தார். தாராபுரத்தில் சத்தியபாமா சுமார் ஒன்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரு தொகுதிகளிலும் அதிமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது. இந்த வெற்றி ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. கட்சியின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இப்போது நூற்று ஒன்பதாக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: சீல் இல்லாத EVM மெஷின்... டிபன் பாக்ஸில் பணம்..! ஜனநாயகம் எப்படி வெல்லும்.? அதிமுக இன்பதுரை அதிருப்தி.!!