#BREAKING: 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை நீட்டிப்பு… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சில உறுப்பினர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து காலியான ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் இதில் அடங்கும். இந்த உத்தரவு ஜூலை 10, 2026 அன்று தலைமை நீதிபதி சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய முதல் அமர்வால் பிறப்பிக்கப்பட்டது.
இந்தத் தடை ஜூலை 31 வரை அமலில் இருக்கும்.நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் சி. ஜோசப் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பின்னர் அவர் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் இருந்து பதவி விலகினார். அதேபோல் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற பெருந்துறை தொகுதி உறுப்பினர் எஸ். ஜெயகுமார், அம்பாசமுத்திரம் தொகுதி உறுப்பினர் இசக்கி சுப்பையா, விராலிமலை தொகுதி உறுப்பினர் சி. விஜயபாஸ்கர் மற்றும் கரூர் தொகுதி உறுப்பினர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இதனால் இந்த ஐந்து தொகுதிகளும் காலியாயின.இந்த வெற்றிகளை எதிர்த்து ஏற்கனவே தேர்தல் மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. அந்த மனுக்களில் வெற்றி பெற்றவர்களின் தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோருவதோடு, மனுதாரர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கவும் கோரப்பட்டிருந்தது. இந்த நிலையில் இடைத்தேர்தல் நடத்தினால் ஒரு தொகுதிக்கு இரண்டு பேர் பிரதிநிதித்துவம் செய்யும் சட்டரீதியான சிக்கல் ஏற்படும் என்றும், பொது நிதி வீணாகும் என்றும் வாதிடப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை... உயர்நீதிமன்றம் அதிரடி ஆணை..! அரசியலில் பரபரப்பு..!!
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த கே. வெங்கடாசலபதி என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் பிரிவு 151ஏ-யின் கீழ் இந்த காலியிடங்களை தெளிவான காலியிடங்களாகக் கருத முடியாது என்றும், தேர்தல் மனுக்கள் நிலுவையில் இருக்கும்போது இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்றும் அவர் வாதிட்டார். உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளையும் அவர் சுட்டிக்காட்டினார். நீதிமன்றம் இந்த வாதங்களை ஏற்றுக்கொண்டு, தேர்தல் ஆணையத்திற்கு இந்த ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடக் கூடாது என இடைக்காலத் தடை விதித்தது.
இந்த ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால் ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை கூறி தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: பீகார், குஜராத், ம.பி.-க்கு இடைத்தேர்தல்..! தமிழகம் மட்டும் வெயிட்டிங் லிஸ்ட்..!! பெரும் குழப்பம்...!!