×
 

பாட்னா டு கோவை வந்த ரயிலில் கஞ்சா சாக்லெட்... தமிழகத்தில் வேலை காட்ட நினைத்த வடமாநிலத்தவர்கள் கைது...! 

பாட்னாவில் இருந்து கோவை வந்த ரயிலில் கஞ்சா சாக்லெட் கடத்தி வந்த வடமாநில இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டில் கஞ்சா சாக்லெட்களை விற்பனை செய்ய முயன்ற வடமாநிலத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

பாட்னாவில் இருந்து கோவை வந்த ரயிலில் கஞ்சா சாக்லெட் கடத்தி வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கோவை ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டு இருந்தார். அப்போது 1வது பிளாட்பாரத்தில் பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயில் வந்து நின்றது. 

அந்த ரயிலில் போலீசார் ஏறி சோதனை மேற்கொண்டனர். முன்பதிவு செய்யப்படாத பெட்டில் சோதனை செய்த போது 2 வடமாநில இளைஞர்கள் சந்தேகத்திற்கு இடமாக அமர்ந்து இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் போலீசார் அவர்கள் வைத்திருந்த பேக்கை சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லெட் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: கோவை உக்கடம் சந்தையில் முக்கனி வாசம்..! பலாப்பழ சீசன் அமர்க்களம்..!!

இதையடுத்து போலீசார் அவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் பீகாரைச் சேர்ந்த விகாஷ் குமார் (26) மற்றும் சந்தோஷ்குமார் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா சாக்லெட் மற்றும் 1 கிலோ 100 கிராம் கஞ்சா  பறிமுதல் செய்யப்பட்டது
 

இதையும் படிங்க: எந்த சக்தியாலும் இந்தியாவை பணிய வைக்க முடியாது!! 1000 ஆண்டுகளுக்கு உத்வேகமாகத் திகழும் - மோடி பெருமிதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share