×
 

கேப்டன் விஜயகாந்த் எப்படிப்பட்டவர் தெரியுமா? மனம் திறந்த சீமான்..!

கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தன் நிலை மாறாது உள்ளன்போடு பழகிய பண்பாளர் என்ற சீமான் புகழாரம் சூட்டினார்.

கேப்டன் விஜயகாந்த், தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல், தமிழக அரசியல் மற்றும் பொது வாழ்விலும் தனித்துவமான அடையாளத்தைப் பதித்த ஒரு மாபெரும் ஆளுமை. அவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும், அவரது ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களால் மிகுந்த உற்சாகத்துடனும், நெகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது. 

விஜயகாந்த், நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி என்ற இயற்பெயருடன், 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் பிறந்தார். அவரது தந்தை கே.என். அழகர்சாமி மற்றும் தாய் ஆண்டாள். மதுரை மண்ணில் பிறந்து, அந்த மண்ணின் பண்புகளையும், மக்களின் அவலங்களை அறிந்து வளர்ந்த விஜயகாந்த், தனது திரை வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், மக்களுக்கு நெருக்கமானவராகவே விளங்கினார். 

விஜயகாந்தின் பிறந்தநாள், அவரது வாழ்நாளில், எளிய மக்களுக்கு உதவி செய்யும் ஒரு விழாவாகவே இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் அவர் தனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி, ஏழை மக்களுக்கு தையல் இயந்திரங்கள், மூன்று சக்கர வண்டிகள், இஸ்திரிப்பெட்டிகள் போன்றவற்றை வழங்கினார். மேலும், தனது கல்லூரியில் ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கி, அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தினார். 

இதையும் படிங்க: கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் கேப்டன்..! அண்ணாமலை புகழாரம்..!

இன்று கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயகாந்த் குறித்து நெகிழ்ச்சிப்பட கூறியுள்ளார். தனது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி, மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்தத் திரைக்கலைஞர் என்று புகழாரம் சூட்டினார். இயக்குநராகவும், நடிகராகவும் பலருக்கு அறிமுக வாய்ப்புகளைக் கொடுத்து, தன்னோடு மற்றவர்களும் மேலேறி வர வேண்டுமெனும் நல்நோக்கத்தோடு கைதூக்கிவிட்ட குணாளர் என்றும் தான் சார்ந்திருக்கிற நடிகர் சங்கம் பெருங்கடனில் மூழ்கித் தவித்தபோது தனது கடினமான உழைப்பாலும், நிர்வாகத்திறனாலும் மீட்டெடுத்த பெருந்தகை என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

ஏழை எளிய மக்கள் எவரும் பசி, பட்டினியாக இருக்கக்கூடாதெனும் உயர்ந்த எண்ணம் கொண்டு, தன்னைநாடி வந்தவர்களுக்கெல்லாம் உணவிட்ட மனிதநேயவாதி கேப்டன் விஜயகாந்த என்றும், எந்த நிலையிலும் தன்னிலை மாறாது உள்ளன்போடு எல்லோரிடமும் சரிசமமாக பழகிய பண்பாளர் எனவும் அவரது நற்செயல்பாடுகளைப் போற்றி வணங்குவதாகவும் சீமான் கூறினார்.

இதையும் படிங்க: அரசியல்லாம் இல்ல! 100% நட்பு ரீதியான சந்திப்பு... பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share