×
 

ஓவர் ஸ்பீடில் மரத்தில் மோதிய கார்... துண்டான பெண்ணின் தலை... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் பலி...!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார் மரத்தில் மோதியதில் காரை ஓட்டி வந்த பெண் தலை துண்டான நிலையில் பெண் உயிரிழந்த பரிதாபம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கடலூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற சொகுசு கார் தாகம் தீர்த்தாபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையோர மரத்தில் கார் மோதிய பயங்கர விபத்தில் காரை ஓட்டி வந்த உபாசனா என்ற பெண் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் காரின் முன் இருக்கையில் அமர்ந்து வந்த உபாசனாவின் மாமியார் உஷா என்பவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த உபாசனாவின் கணவர் வெங்கடேஷ் மற்றும் அவரது 9 வயது குழந்தை அக்சத்,7 வயது குழந்தை அங்குத் மற்றும் சிவக்குமார் ஆகியோர் படுகாயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் மூலமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தொடர்ந்து இந்த விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உபாசனா சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருவதாகவும் அவரது கணவர் வெங்கடேஷ் தனியார் வங்கியில் வங்கி அலுவலராக பணியாற்றி வருவதாகவும் சென்னையில் இருந்து வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு செல்லும் வழியில் இந்த கோர விபத்து நடைபெற்றுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. 

தொடர்ந்து உயிரிழந்த உபாசனா மற்றும் அவரது மாமியார் உஷா ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த விபத்து சம்பவம் தொடர்பாக கீழ்குவம்புலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் வேப்பூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share