×
 

#BREAKING வேகத்தில் பறந்த கார் மரத்தில் மோதி விபத்து... 3 மருத்து மாணவர்கள் துடிதுடித்து பலி...!

தூத்துக்குடியில் வேகமாக சென்ற கார் மரத்தில் மோதிய விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தூத்துக்குடியில் நேற்று இரவு பயங்கரம் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களில் கார் கட்டுப்பாட்டை வந்து விபத்துக்குள்ளாகி மூணு பேர் சம்பவி இடத்திலே பரிதாமாக உயிரிழந்தனர்.

 தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வரும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 24 வயதான சரண், சீனிவாசன் மகன் முகிலன் (வயது 23) புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பரிசுத்தமன் மகன் ராகுல் ஜெபன் (வயது 23) கோயம்புத்தூர் சேர்ந்த சுந்தரராஜ் மகன் சார்பன் (வயது 23) ஆகியோர்சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர்.

 ஐந்து பேர் இந்த காரில் சென்றுள்ளனர். தூத்துக்குடியை சேர்ந்த ரவிக்குமார் மகன் கீர்த்திகுமார் காரை ஓட்டிச் சென்றபோது இந்த கோர விபத்து நடந்துள்ளது. நேற்றிரவு மழை பெய்த காரணத்தினால் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. 

அதில் சம்பவ இடத்திலே ராகுல் ஜெபன், சார்பன், முகிலன் ஆகியோர் பரிதாபமாக உயிர் இழந்தனர் காயமடைந்த முகிலன் என்பவர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் சரண் மற்றும் கீர்த்தி குமார் ஆகியோர் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரியில் தற்சமயம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இது குறித்து தென்பாகம் கிராமம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையின் படி, இரவு நேர மருத்துவப் பயிற்சியை முடித்துவிட்டு அதிகாலை வீடு திரும்புவதை இந்த மாணவர்கள் வழக்கமாக கொண்டிருந்ததும், அவ்வாறு இன்று அதிகாலை வீடு திரும்பிய போது விபத்து நிகழ்ந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share