×
 

தமிழக அரசு பதில் சொல்லியே ஆகணும்... இருமல் மருந்து விவகாரத்திற்கு குரல் கொடுத்த கார்த்தி சிதம்பரம்...!

இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசும் அதிகாரிகளும் பதில் கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தினார்.

சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி முதல் இந்த சோக சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்துள்ளன. 1 முதல் 7 வயது வரையிலான குழந்தைகள் லேசான காய்ச்சல், இருமல் காரணமாக உள்ளூர் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றனர். அப்போது அளிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் மற்றும் நெக்ஸ்ட்ரோ-டிஎஸ் என்ற இருமல் மருந்துகளை உட்கொண்ட பிறகு, அவற்றின் நிலைமை திடீரென மோசமடைந்தது.

சிறுநீர் வெளியேறாமை, சிறுநீரகத் தொற்று, வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றின. பவர் அருகிலுள்ள மகாராஷ்டிராவின் நாக்பூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 3 குழந்தைகள் டயலிசிஸ் சிகிச்சை பெற்றபோதிலும் உயிரிழந்தனர். இப்படி இதுவரை 22 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அணுகுமுறை குழுக்கள் சிந்த்வாராவில் விசாரணை நடத்தி, மருந்து மாத்திரைகளை சேகரித்துள்ளன. மேலும் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மத்திய பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆகியவை இந்த மருந்துகளின் தரத்தை சோதித்து வருகின்றன. கோல்ட்ரிப் இருமல் மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்று அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவுறுத்தியிருந்தார்.

இதையும் படிங்க: தவெக கட்சியே இல்ல... என்ன பொசுக்குன்னு இப்படி பேசிட்டாரு கார்த்தி சிதம்பரம்...?

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வந்த மருந்து ஆலை மூடப்பட்டது. இந்த நிலையில் இரும்பல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசும் அதிகாரிகளும் பதில் கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: அதிமுக அமித்ஷா காலில் விழுந்து கிடக்குது… மாணிக்கம் தாகூர் எம்.பி. சரமாரி குற்றச்சாட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share