×
 

காவிரி நதிநீர் பங்கீடு... 44வது கூட்டம் தொடக்கம்... தமிழகத்தின் நிலைப்பாடு என்ன?

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 44-வது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

காவிரி ஆறு, தமிழ் மண்ணின் அமுத நீராகவும், கர்நாடகாவின் பசுமை வயல்களைத் தழுவும் ஜீவனாங்கியாகப் பார்க்கப்படும் இந்தப் பெரியாறு, காலமாறி மாநிலங்களுக்கு இடையேயான உணர்ச்சி மற்றும் அரசியல் பிணக்குகளின் மையமாக மாறியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் முக்கிய அமைப்பாக, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் (Cauvery Water Management Authority - CWMA) திகழ்கிறது. இது வெறும் நிர்வாக அமைப்பல்ல.

அது நதியின் நீரை நியாயமாகப் பகிர்ந்து கொள்ளும் ஒரு சட்டப்பூர்வமான கட்டமைப்பு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஒரு ஒழுங்குமுறை அமைப்பு.  2018, ஜூன் ஒன்றாம் தேதி மத்திய ஜல்ஷக்தி அமைச்சகம் காவிரி நீர் மேலாண்மை திட்டம்' அறிவிப்பை வெளியிட்டது. இதன் கீழ், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு (Cauvery Water Regulation Committee - CWRC) ஆகியவை உருவாக்கப்பட்டன.

இந்த ஆணையம், 1956 சட்டத்தின் பிரிவு 6Aன் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பு. இது டெல்லியில் தலைமையகம் கொண்டு செயல்படுகிறது. ஆணையத்தின் அமைப்பு, ஒரு தலைவர், ஒரு செயலர் மற்றும் எட்டு உறுப்பினர்களைக் கொண்டது. இதில் இரு முழுநேர உறுப்பினர்கள் மற்றும் இரு பகுதிநேர உறுப்பினர்கள் மத்திய அரசு சார்பாக இருப்பார்கள். மாநிலங்களிடமிருந்து ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஒரு உறுப்பினர் நியமிக்கப்படுவார்கள். தற்போதைய தலைவராக சௌமித்ரா குமார் ஹல்தார் (எஸ்.கே. ஹல்தர்) பணியாற்றுகிறார். 

இதையும் படிங்க: கர்நாடகாவின் டாப் 8 கோடீஸ்வரர்கள் இவர்கள் தான்.. லிஸ்ட் இதோ..!!

ஆணையத்தின் முதன்மை பணிகள், காவிரி நதியின் நீரை சேமித்தல், பங்கீடு, ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாட்டை மேற்பார்வை செய்வதாகும். இந்த நிலையில், 44 வது காவிரி நீர் மேலாண்மை கூட்டம் தொடங்கியது. எஸ்.கே. ஹல்தர் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன் கலந்துக் கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: வைரத்தில் ஜொலிக்கும் விநாயகர்.. அடேங்கப்பா..!! இத்தனை லட்சமா..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share