×
 

நாட்டின் 8வது மக்கள்தொகை கணக்கெடுப்பு..! சென்சஸ் பணிகள் இன்று முதல் தொடக்கம்..!!

இன்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்குகின்றன.

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் தொடங்குகின்றன. இது நாட்டின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். சுதந்திரத்திற்குப் பிறகு 8வது கணக்கெடுப்பு. 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு 15 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் இந்த முக்கியமான பணி, இந்தியாவின் முதல் முழு டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பாக அமையும்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக தாமதமான இந்தக் கணக்கெடுப்பு, நாட்டின் சமூக-பொருளாதார நிலவரத்தை துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டம் வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் செப்டம்பர் 30 வரை நீடிக்கும்.

ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் வசதிக்கேற்ப 30 நாட்கள் கால அளவில் இந்தப் பணி மேற்கொள்ளப்படும். இந்தக் கணக்கெடுப்பின் சிறப்பம்சம் அதன் டிஜிட்டல் தன்மை ஆகும். முதல் முறையாக, பொதுமக்கள் தாங்களே ஆன்லைன் மூலம் சுய விவரங்களை பதிவு செய்யும் வசதி வழங்கப்படும். இணையதளம் வழியாக பதிவு செய்யும் வாய்ப்பு மக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாக்., அழுத்தத்திற்கு பணிந்ததா ஈரான்?! காஷ்மீர் விவகாரம்!! இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த பதிவுகள் அழிப்பு!!

இன்று தொடங்கும் இந்தப் பணி, 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என்ற இலக்குடன் முழு வீச்சில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பில் தேசிய மக்கள் பதிவேடு புதுப்பிப்பு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தலைமை பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் கெடுபிடி..! வளைகுடா நாடுகளில் வேலை இழந்த மக்களுக்கு துயரம்.! MP சு. வெங்கடேசன் கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share