தமிழக மக்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு... சுங்கச்சாவடி குறித்து அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்...!
சுங்கச்சாவடிகள் மூடும் திட்டம் எதுவும் கிடையாது என ஒன்றிய அரசு திட்டவட்டமாக கடிதம் அனுப்பியுள்ளது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
வேலூரில் புதியதாக பழைய அரசு மருத்துவமனை இருந்த இடத்தில் ரூ.150 கோடியில் பல் நோக்கு அரசு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்தன இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வேலூர் ஆட்சியர் சுப்பு லெட்சுமி சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார்,கார்த்திகேயன்,வில்வநாதன், உள்ளிட்டோரும் அதிகாரிகளுடனும் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகள் மூடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு அது குறித்து நான் பல முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டேன் அவர்கள் தற்போது தான் கடிதம் அனுப்பி இருக்கின்றனர் சுங்கச்சாவடிகள் காலாவதி என்பது கிடையாது. அவர்கள் வசூல் செய்யும் பணம் சாலைகளை பராமரிக்கவும் மேம்பாலம் கட்டவும் பயன்படுத்துவதாக மத்திய அரசு கூறியுள்ளது இனி சுங்கச்சாவடி காலாவதி என்பதே கிடையாது என மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
அதனை நான் சட்டமன்றத்தில் பதிலாக சொல்லிவிட்டேன் ஒன்றிய அரசாங்கம் எந்த சுங்கச்சாவடியையும் மூடுவதாக இல்லை. தற்போது புதிய அரசு பல்நோக்கு மருத்துவமனையில் புதிய மருத்துவர்கள் நியமிப்பது குறித்து நாளை சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு செய்யவுள்ளார் அவர் முடிவு எடுப்பார் இருப்பினும் மருத்துவர்களுக்கு கூடுதல் பணிகள் இம்மருத்துவமனையையும் சேர்த்து கவனிப்பார்கள்.
இதையும் படிங்க: நல்லிணக்கம், அமைதி மேம்படட்டும்! பிரதமர், குடியரசுத் தலைவர் பக்ரீத் வாழ்த்துகள்...
சி.எம்.சி மருத்துவமனையின் அருகே சுரங்கப்பாதை அமைக்க அவர்களிடம் இடம் கேட்டுள்ளோம் அவர்களுடன் பேசி வருகிறோம் மருத்துவமனைக்கு நிதி போதுமான என்பது கிடையாது. நிதி தேவைபட்டுகொண்டே இருக்கும் தமிழக முதல்வர் மக்கள் நல்வாழ்வு துறை ஒரு கண் கல்வித்துறை ஒரு கண் என சொல்லியுள்ளார் இந்த இரண்டு துறைக்கும் தாராளமாக செலவு செய்வார்.
ஏற்கனவே கடந்த ஆட்சியில் 70 ரயில்வே மேம்பாலம் அமைக்க ஒப்புதல் வழங்கிவிட்டு சென்றுவிட்டனர் ஆனால் நிலங்கள் கையகப்படுத்தபடவில்லை அனுகு சாலையும் அமைக்க திட்டமிடவில்லை நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ரயில்வே பாலம் 35 பாலங்கள் முடித்துவிட்டோம் மேலும் 32 ரயில்வே பாலம் முடியும் தருவாயில் உள்ளது.
இதையும் படிங்க: நிகரற்ற ஏக இறைவன் அல்லாவின் அருள் கிடைக்கட்டும்! சீமான் பக்ரீத் வாழ்த்து...