சென்னை அருகே பேரதிர்ச்சி... தாயை வெட்டிய மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை கைது...!
மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நரிக்குறவர்கள் குடியிருப்பில் தாய், தந்தை,இடையே மோதல், மகன் மீது துப்பாக்கிச் சூடு
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தாயை வெட்டிய மகனை தந்தை சுற்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மரகத பூங்கா அருகே நேற்று மாலை 6 மணிக்கு பூஞ்சேரி நரிக்குறவர் குடியிருப்பை சேர்ந்த மகனுக்கும் தாய்க்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது மதுபோதையில் இருந்த 25 வயது மகன் கேப்டன் பிரபாகரன் தன்னுடைய தாயாரான மாலாவை குடும்ப தகராறு காரணமாக ஆத்திரத்தில் கத்தியால் வெட்டியுள்ளார். இதனால் மாலாவுக்கு இடது கை மணிக்கட்டு அருகே காயம் ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையிலே இன்று அதிகாலை சுமார் இரண்டு மணி அளவில் பூஞ்சேரியில் உள்ள தனது வீட்டில் இருந்த போது தந்தை சேகர் என்பவர் மகன் கேப்டன் பிரபாகரனை ஏன் தாயை கத்தியால் வெட்டினாய் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார. இந்த வாக்குவாதமானது கைகலப்பாக மாறிய நிலையில், வீட்டில் வைத்திருந்த அதாவது கொக்கு சுடுவதற்கு பயன்படுத்தப்படும் நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து மகனை நோக்கி சுட்டதில் பிரபாகரனுக்கு இரண்டு கால் முட்டிக்கு கீழே காயம் ஏற்பட்டு சுரண்டு விழுந்துள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்க மசூதியில் துப்பாக்கிச்சூடு... பாதுகாப்பு அதிகாரி உட்பட 3 பேர் பலி... இறுதியில் நடந்த விபரீதம்...!
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார் துப்பாக்கி சூட்டினால் காயமடைந்த கேப்டன் பிரபாகரனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.தற்போது அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகனை துப்பாக்கியால் சுட்ட நறிக்குறவர் சேகரை மாமல்லபுரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சம்பவமானது அப்பகுதியில பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பினராயி விஜயன் மீதான ED விசாரணைக்கு தடை விதிக்கணும்..!! ஐகோர்ட்டில் மேல்முறையீடு..!!