×
 

திக்... திக்... சம்பவம்...!! - கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பியோடிய விவகாரத்தில் அதிரடி திருப்பம்...!

செங்கல்பட்டு கூர்நோக்கு மையத்தில் இருந்து 12 சிறார்கள் தப்பிச் சென்ற சம்பவத்தில், தற்போது ஒருவரை போலீசார் பிடித்துள்ளனர்.

செங்கல்பட்டு அருகே ஆத்தூர் பகுதியில் அரசின் பாதுகாப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தமிழகம் முழுவதும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 18 வயதிற்குட்பட்ட சிறார்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது 70-க்கும் மேற்பட்ட சிறார்கள் இந்த பாதுகாப்பு இல்லத்தில் உள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அங்கு தங்கியிருந்த சிறார்களுக்காக தொலைக்காட்சியில் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. அப்போது சிறார்களுக்குள் ஏற்பட்ட தகராறு திடீரென வன்முறையாக மாறியது.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஆசிரியர்கள், வார்டன் மற்றும் காவலாளி உள்ளிட்ட நான்கு பேரை சிறார்கள் தாக்கிவிட்டு, 12 பேர் கொண்ட குழு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதையும் படிங்க: #BREAKING கரிசல் எழுத்தாளருக்காக கலங்கிய சி.எம்.... வேதனையுடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஜய்...!

வெளியே வந்த அவர்கள், சாலையில் நடந்து சென்ற சிலரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்கள், செல்போன்கள் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர வாகனத் தணிக்கை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், சென்னை கே.கே. நகர் பகுதியில் தப்பிச் சென்றவர்களில் ஒருவர் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், 19 வயதுடைய இளைஞரை பிடித்து, செங்கல்பட்டு தாலுக்கா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தப்பிச் சென்றுள்ள மற்ற 11 பேர் எங்கு உள்ளனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.செங்கல்பட்டு கூர்நோக்கு மையத்தில் இருந்து 12 பேர் தப்பிச் சென்ற இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: குட்காவுடன் கையும் களவுமாக சிக்கிய தவெக நிர்வாகி... போலீஸ் செய்த காரியத்தால் பொதுமக்கள் செம்ம ஷாக்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share