“ப்ளீஸ் சார்... வேண்டாம்...” - தொடக்கூடாத இடத்தில் தொட்டு 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை... காமக் கொடூர HM கைது...!
6-ம் வகுப்பு பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் அரசு தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது:
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த தண்டலம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் மனோகரன் (வயது52). இவர் திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் உள்ள செம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். செம்பாக்கம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை தனித்தனியே உள்ளது.
தொடக்கப்பள்ளியில் படித்து முடித்து மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு முதல் பயிலும் மாணவி, மாணவிகள் சிலர் தாங்கள் ஏற்கனவே பயின்ற அரசு தொடக்கப்பள்ளிக்கு வந்து பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்துவது, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுவர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இதுபோன்று பள்ளிக்கு உதவி புரிய வந்த 12 வயதுள்ள 6-ஆம் வகுப்பு மாணவியை தனியே அழைத்துச் சென்ற செம்பாக்கம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் மனோகரன் அந்த மாணவிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தொிகிறது. இதுகுறித்து அந்த மாணவி தனக்கு நேர்ந்த அவலத்தை பெற்றோரிடம் அழுது கொண்டே கூறியதை அடுத்து.
அவரது பெற்றோர் ஆவேசமடைந்து சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸ் கட்டுப்பாட்டு எண்ணில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து திருப்போரூர் சிங்கப்பெண் அதிரடிப்படை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணகி பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி அந்த அறிக்கையை மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பினர். அதன் அடிப்படையில் மாமல்லபுரம் மகளிர் காவல் நிலைய போலீசார் பாதிக்கப்பட்ட பள்ளி சிறுமியிடமும், அவரது பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர்.
பிறகு போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து செம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் மனோகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் செம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் மனோகரனை இடைநீக்கம்(சஸ்பெண்ட்) செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது...