×
 
☰

6 வயது சிறுமியை தனியே கூட்டி சென்று 3 பேர் செய்த அதிபயங்கரம்... வடமாநில இளைஞர்களை விரட்டி, விரட்டி வெளுத்த மக்கள்...!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் 6 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் வடமாநில இளைஞர்களில் ஒருவரை அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சென்னை வடபகுதியான திருவொற்றியூர் பகுதியில் 6 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் வடமாநில இளைஞர் ஒருவர் தப்பி ஓடிய நிலையில், அவரை அக்கம் பக்கத்தினர் விரட்டிப் பிடித்து தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவரது பெற்றோர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதை அறிந்து, அது குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மொழிப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது அதே மருத்துவமனையில் தனது உறவினர் பெண்ணுக்கு சிகிச்சைக்காக வந்திருந்த தாஜ் என்பவரும் அவரது குடும்பத்தினரும், மருத்துவர் கூறிய தகவலை அறிந்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

இதையடுத்து, அவர்கள் சிறுமியின் பெற்றோரிடம் பேசி, சிறுமிக்கு என்ன நடந்தது என்பது குறித்து கேட்டறிந்துள்ளனர். பின்னர் சிறுமியிடம் அன்பாகப் பேசியபோது, தனக்கு நடந்த சம்பவம் குறித்து சிறுமி தெரிவித்துள்ளார்.

அதன்படி, தன்னை பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகுல், சித்தரஞ்சன் மற்றும் மனோஜ் ஆகிய மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்களில் சிலரை சிறுமி அடையாளம் காட்டியதாகவும் தெரிகிறது.

இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து தாஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மூவரையும் பிடிக்க முயன்றுள்ளனர்.

அப்போது முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ராகுல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து தாஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் ராகுலை விரட்டிச் சென்று பிடித்துள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ராகுலுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.

பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராகுலை பொதுமக்களிடமிருந்து மீட்டு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மனோஜ் என்பவர் மட்டும் தப்பி ஓடியதாகவும், அவரை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த ராகுல் மற்றும் சித்தரஞ்சன் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதி ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வருவது தெரியவந்துள்ளது. அவர்கள் மாலை நேரங்களில் பானிபூரி விற்பனைக்காக வெளியே செல்வதாகவும் கூறப்படுகிறது.

அவர்கள் வெளியே சென்ற நேரத்தில், மேல்தளத்தில் வசித்து வந்ததாகக் கூறப்படும் மூன்று இளைஞர்களும் சிறுமிக்கு தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்து, அவரை மேல்தளத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இதையும் படிங்க: சர்ரென குறையும் டெங்கு பாதிப்பு... சென்னை மாநகராட்சி ஆணையரின் அப்டேட்... மக்கள் நிம்மதி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share