×
 

புகை போர்வையில் சென்னை! மணலியில் 168 AQI ஆக எகிறிய காற்று மாசுபாடு; தவிக்கும் மக்கள்!

சென்னையில் இன்று காற்று மாசுபாடு மிதமான அளவில் உள்ள நிலையில், அதிகபட்சமாக மணலியில் 168 AQI-ம், குறைந்தபட்சமாக ராயபுரத்தில் 64 AQI-ம் பதிவாகியுள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் போகிப் பண்டிகை புகையினால் காற்று மாசுபாடு கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், மணலி பகுதியில் அதிகபட்சமாகக் காற்றுத் தரக் குறியீடு 168 ஆகப் பதிவாகியுள்ளது.இது குறித்த கடந்த 24 மணிநேரத்திற்கான இறுதி அறிக்கையைத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இன்று மாலை வெளியிட உள்ளது.

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் இன்று அதிகாலை மக்கள் பழைய பொருட்களை எரித்துக் கொண்டாடியதால், சென்னையின் வான்பரப்பு முழுவதும் சாம்பல் நிறப் புகைப் படலமாக மாறியுள்ளது. இது ஒருபுறம் விமானங்களின் ஓடுதளப் பார்வைத் திறனைப் பாதித்துள்ள நிலையில், மறுபுறம் பொதுமக்களின் சுவாச ஆரோக்கியத்திற்கும் சவாலாக அமைந்துள்ளது. மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நேரடித் தரவுகளின்படி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் இன்று காலை முதலே ‘மிதமான’ நிலையைத் தாண்டி அபாயக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

 

சென்னை மாநகரின் பல்வேறு மண்டலங்களில் உள்ள காற்றுத் தரக் கண்காணிப்பு மையங்களின்படி, மணலி பகுதியில் மிக அதிகபட்சமாக 144 AQI பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து கொடுங்கையூரில் 123 AQI, அரும்பாக்கத்தில் 117 AQI மற்றும் பெருங்குடியில் 103 AQI எனப் பதிவாகியுள்ளது. இந்த அளவீடுகள் அனைத்தும் ‘மிதமான மாசுபாடு’ என்ற பிரிவின் கீழ் வந்தாலும், இதயம் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு இது அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது. வேளச்சேரியில் 74 AQI ஆகவும், ராயபுரத்தில் மிகக் குறைந்த அளவாக 64 AQI ஆகவும் பதிவாகியுள்ளது. 

இதையும் படிங்க: பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறோம்! கிளாம்பாக்கத்தில் மக்கள் வெள்ளம்! 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

நேற்று போகித் தொடக்கம் முதல் இன்று காலை வரை ஒட்டுமொத்தமாகப் பதிவான காற்றின் தரக் குறியீட்டின் சராசரி மற்றும் அதன் பாதிப்புகள் குறித்த இறுதி அறிக்கையைத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது. புகையைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சிக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


 

இதையும் படிங்க: சென்னையில் நேரடி ஆய்வு! புதிய பாடத்திட்டம் எப்படி இருக்கணும்? பள்ளிக் கல்வித் துறை கருத்துக் கேட்பு கூட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share