×
 

Alert...! Alert...!! - “நாளை வரை நிற்காது போலயே” - சென்னைக்கு வந்தது அடுத்த ஆபத்து...!

சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் - வடதமிழகம் - புதுவை  - தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பொதுவாக வடக்கு திசையில் நகர்ந்து,  இன்று (02-12-2025) காலை நிலவரப்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுக்குறைந்தது. அதே  பகுதிகளில், சென்னைக்கு  கிழக்கு - தென்கிழக்கே சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு  வடகிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தெற்கு - தென்கிழக்கே சுமார் 190 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அப்பொழுது, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதிகளிலிருந்து  வடதமிழக - புதுவை கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 25 கிலோ மீட்டராக இருந்தது.

இது  தென்மேற்கு திசையில் மெதுவாக வடதமிழக – புதுவை களோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து,  அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து, அதற்கடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுக்குறையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னைக்கு மிக அருகில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வீரியம் குறையாமல் நிலைக்கொண்டுள்ளதால்,  வடதமிழக கடலோரப்பகுதிகளில் அநேக இடங்களிலும், ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,  இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட இரண்டு மாவட்டங்களில் 7 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்வதற்காக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசனாது முதல் மிதமான மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: வானிலை அலர்ட்... கனமழை பெய்யுமாம்..! உஷார் மக்களே...!

சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. 
 

இதையும் படிங்க: குடை எடுத்தாச்சு... 7 மாவட்டங்களில் மழை கொட்டப்போகுது... உஷார் மக்களே...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share