×
 

அடுத்தடுத்து சிக்கல்...!! சென்னை, கோவையில் அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து... காரணம் என்ன?

சென்னையிலிருந்து புறப்படும் 32 விமானங்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பிற இடங்களிலிருந்து சென்னை வரும் 33 விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 

இண்டிகோ விமான நிறுவனம் மீண்டும் விமானங்களை ரத்து செய்ததால், பயணிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்பாராத செயல்பாட்டு சவால்களால் இந்த இடையூறுகள் ஏற்பட்டதாக இண்டிகோ தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறுகள், குளிர்கால அட்டவணை மாற்றங்கள், மோசமான வானிலை, விமான அமைப்பில் அதிகரித்த நெரிசல் மற்றும் புதிய விதிமுறைகளின் படி விமான பணியாளர்கள் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி போன்ற காரணங்களால் இண்டிகோ நிறுவனம் அடுத்தடுத்து சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. 

இந்தியா முழுவதும் இண்டிகோ விமான அதிகாரிகளுக்கும் பைலட்டுகளுக்கும் இடையே இடவும் கருத்து வேறுபாடு காரணமாக தொடர்ந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நேற்றிரவு 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை கடந்த 12 மணி நேரத்தில்  சுமார் 65 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி, மும்பை, ஐதராபாத், ஜெய்ப்பூர் , அந்தமான், பெங்களூர், விசாகப்பட்டினம், கொச்சி, கோவை மற்றும் இந்தோனேசியா, இலங்கை உள்ளிட்ட  பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

அதேபோல் டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, கொச்சி, புவனேஸ்வர், ராய்பூர், இந்தூர், புனே, கோவை உள்ளிட்ட 33 இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸின் 33 விமானங்கள் இன்று ரத்தம் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் கோவை விமான நிலையத்திற்கு  இயக்கப்படும் 7 இன்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  நிர்வாக காரணங்களால் நேற்று இன்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் இன்றும் கோவை - சென்னை, கோவை - ஐதராபாத், டெல்லி - கோவை என 7 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதையும் படிங்க: இன்டிகோ விமானங்களுக்கு என்ன ஆச்சு? - நாடு முழுவதும் 200 விமானங்கள் ரத்து... வெளியானது பரபரப்பு அறிக்கை...!

ஒவ்வொரு முறையும் இண்டிகோ நிறுவனம் விமான சேவையை ரத்து செய்வது பயணிகளை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. தங்குமிடம், போக்குவரத்து மற்றும் வேலை இழப்புக்கான செலவுகளை யார் ஏற்றுக்கொள்வார்கள்? என பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, இண்டிகோ நிறுவனம் மீதானதங்களது கோவத்தை சோசியல் மீடியாக்களிலும் வெளிக்காட்டி வருகின்றனர். 

இதையும் படிங்க: #BREAKING திருப்பரங்குன்றத்தில் திக்.. திக்...!! - காலையிலேயே காவல்துறை அதிரடி... நயினார் நாகேந்திரன் உட்பட 113 பேர் மீது பாய்ந்தது நடவடிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share