பற்றி எரிந்த சரக்கு ரயில்... 17 மணி நேரம் நடந்த போராட்டம் - தற்போதைய நிலவரம் என்ன?
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் நான்கு மூன்று தண்டவாளம் பகுதி சீரமைக்கப்பட்டு 21 மணி நேரம் பிறகு சென்னை அரக்கோணம் மார்க்கமாக ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் நான்கு மூன்று தண்டவாளம் பகுதி சீரமைக்கப்பட்டு 21 மணி நேரம் பிறகு சென்னை அரக்கோணம் மார்க்கமாக ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் வந்த பாரத், புறநகர் ரயில்கள் விபத்து நடந்த பகுதியில் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு கடந்து செல்கின்றன. சென்னை மணலி ஐ.ஓ.சி.எல் இருந்து 52 டீசல் டேங்கர்களில் டீசல் நிரப்பி கொண்டு சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற சரக்கு ரயிலானது.
திருவள்ளூர் ஏகாட்டூர் ரயில் நிலையம் இடையே நேற்று காலை 5:10 மணியளவில் ரயில் தடம் புரண்ட விபத்தில் 18 டீசல் டேங்கர்கள் கவிழ்ந்து எரிய தொடங்கியதால் 7 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இந்த தீ விபத்தில் 12 கோடி மதிப்பிலான
12 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் டீசல்கள் எரிந்து நாசமானது.
இதையும் படிங்க: "ஏய்..ஏன்யா கத்துறீங்க” டென்ஷனான திருமா... மிரண்டு போன தொண்டர்கள்...!
அதைத் தொடர்ந்து முதல் இரண்டாவது தண்டவாள பகுதியில் கவிழ்ந்து விழுந்த 18 டேங்கர்களை இரண்டு ராட்சத கிரேன் உதவியுடன் 21 மணி நேரம் போராடி அப்புறப்படுத்தப்பட்டன. மற்றொரு புறத்தில் புறநகர் ரயில்கள் செல்லக்கூடிய நான்காவது மூன்றாவது தாண்டவளம் பகுதி இரவு சீரமைக்கப்பட்டு அந்த தண்டவாளப் பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்தே பாரத், புறநகர் ரயில்கள் குறைந்த வேகத்தில் கடந்து இயக்கப்பட்டு வருகின்றன.
எக்ஸ்பிரஸ் வந்தே பாரத் ரயில்கள் ரயில்களானது கடம்பத்தூர் ரயில் நிலைய கிராசிங் மாற்றப்பட்டு வழக்கமாக செல்லக்கூடிய வழித்தடத்திற்கு மாற்றி அனுப்பப்பட்டு வருகின்றது. விபத்து ஏற்பட்ட தண்டவாளம் ஒன்று இரண்டு பகுதியில் 300 மீட்டர் அளவில் தண்டவாளம் முழுமையாக சேதமடைந்து இருப்பதால் அத்தகைய தண்டவளங்கள் அப்புறப்படுத்தப்பட்டு புதிதாக தண்டவாளம் அமைக்கும் பணியானது 26 மணி நேரம் மேலாக ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
சேதமடைந்த தண்டவாளம் ஒன்று இரண்டு முழுமையாக சீரமைக்கப்பட்டு அவ் வழித்தடத்தில் மதியம் அல்லது மாலை ரயில்கள் சீராக இயக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சரக்கு ரயில் விபத்தால் சென்னை அரக்கோணம் மார்க்கமாக புறநகர் ரயில்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விபத்து அதிகம் வெப்பத்தால் தண்டவாளம் விரிசல் ஏற்பட்டு விபத்து நடந்ததாக ரயில்வே போலீசார் முதல் கட்ட தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மாங்காய் லோடு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து கோர விபத்து... 8 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி...!