சென்னையில் அதிர்ச்சி... கல்லறை மீது பச்சையப்பன் கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை...!
கும்மிடிப்பூண்டி அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சானாபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது இளைஞர் ரஞ்சன். இவர் அண்மையில் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்து, பின்னர் படிப்பைக் கைவிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திருட்டு வழக்கு ஒன்றிலும் இவர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு வீட்டிலிருந்து சென்ற ரஞ்சன், இன்று காலை வரை வீடு திரும்பாமல் இருந்திருக்கிறார். பொதுமக்கள் வெளியே சென்று பார்த்தபோது, இன்று காலை விவசாய நிலம் ஒன்றில் இருந்த கல்லறையின் மீது ரஞ்சன் தலையில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், இது தொடர்பாக பாதிரிவேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தற்போது சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வெடிகுண்டு வீசி, ஓட ஓட கத்தியால் சரமாரி வெட்டி கொலை... கடலூரை நடுநடுங்க விட்ட சம்பவம்...!
நேற்று இரவு இளைஞர்கள் சிலர் இந்த விவசாய நிலத்தில் உள்ள கல்லறையின் அருகே அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், ஏற்கனவே முன்விரோதம் இருந்ததா அல்லது வாய்த்தகராறில் இந்தக் கொலைச் சம்பவம் நடந்ததா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 வயது இளைஞர் ஒருவர் கல்லறையின் மீது கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கக்கூடிய சம்பவம் தற்போது இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிரிவேடு காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து தனிப்படைகள் அமைத்து, சாலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து, குற்றவாளிகளைக் கண்டறியும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "நான் வேண்டாமா"..? காதல் பிரச்சனை... பல்லடத்தில் தாய், மகள் இரட்டை கொலை. இளைஞர் வெறிச்செயல்..!!