சென்னை மக்களே கவனிங்க..! சொத்து வரி வசூலுக்கு அதிரடி... சென்னை மாநகராட்சி நடவடிக்கை..!
சென்னையில் சொத்துவரி வசூல் முகாம் நடைபெறுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் நிலுவைத் தொகையில் உள்ள சொத்து வரியை வசூலிக்கும் வகையில் சிறப்பு முகாம் ஒன்று இன்று (ஜூலை 3) முதல் ஜூலை 17 வரை நடைபெற உள்ளது. அனைத்து மண்டல அலுவலகங்கள் மற்றும் வார்டு அலுவலகங்களில் இந்த முகாம் செயல்படும். சொத்து உரிமையாளர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த முகாம்களுக்கு நேரில் சென்று தங்கள் நிலுவை வரியை செலுத்தலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறப்பு முகாம் மூலம் சொத்து வரி செலுத்துவதில் ஏற்படும் சிரமங்களை குறைத்து, உரிமையாளர்களுக்கு வசதியை ஏற்படுத்துவதே மாநகராட்சியின் நோக்கமாகும். பல சொத்து உரிமையாளர்கள் வரியை செலுத்த தாமதம் செய்வதால், நிலுவைத் தொகை அதிகரித்து வட்டியும் சேர்ந்து பெருகும் நிலை உள்ளது.
இதனைத் தவிர்க்கும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாம் காலத்தில் நேரில் வந்து செலுத்துபவர்களுக்கு உடனடி ரசீது வழங்கப்படும் மற்றும் அனைத்து வசதிகளும் செய்யப்படும். சென்னை மாநகராட்சியின் வருவாய் துறை சார்பில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. மண்டல அலுவலகங்கள் மற்றும் வார்டு அலுவலகங்களில் போதிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, வரி செலுத்துவோருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்.
இதையும் படிங்க: குறைதீர் முகாம்..! அரசின் திடீர் அறிவிப்பு... ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முக்கிய நாள்!
சொத்து வரி தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் அல்லது ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் இருந்தாலும் அங்கேயே தீர்க்க முயற்சி எடுக்கப்படும். மாநகராட்சி அதிகாரிகள், இந்த காலகட்டத்தில் அதிக அளவில் உரிமையாளர்கள் வரி செலுத்தி வரவேற்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுடன் சமரசம் இல்லை.. அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!