×
 

சொத்து வரி உயர்வா?... 3.49 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்... சென்னை மாநகராட்சி அதி முக்கிய அறிவிப்பு...!

சென்னையில் 3.49 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு வரி மறுமதிப்பீட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

 சென்னையில் பல்வேறு இடங்களிலும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி தரப்பில், இந்த சொத்து வரி உயர்வு எதுவும் செய்யப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திடீரென இந்த சொத்து உரிமையாளர்களுக்கு மறுமதிப்பீட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரண்டாவது காலாண்டுக்கான சொத்து வரி வசூல் பல்வேறு மண்டலங்களிலும் நடைபெற்று வந்தது. இந்த நடைமுறைக்குப் பிறகு தற்போது இந்த மறுமதிப்பீட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் சொத்துக்களுக்கு இந்த மறுமதிப்பீட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் தரவுகளில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய 6 பேர் சஸ்பெண்ட்..! சென்னை கார்ப்பரேஷனில் Action Mode..!

மறுமதிப்பீடு செய்யப்பட்டிருக்கக்கூடிய சொத்து உரிமையாளர்களில் 3 லட்சத்து 40 ஆயிரம் பேரின் குடியிருப்பு சொத்துக்களில் 55 சதவீத கட்டிடங்களுக்கு ரூ.1,000-க்கும் குறைவாகவே வரி உயர்த்தப்பட்டிருப்பதாகவும், அதேபோல 95 சதவீத சொத்துக்களுக்கு ரூ.5,000-க்குள்தான் இந்த சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஏற்கனவே பெருநகர சென்னை மாநகராட்சியின் வரி வருவாயைப் பெருக்குவதற்கும், தடை செய்யப்பட்டிருந்த, அதாவது வசூலாகாத வரிகளை நடைமுறையில் வசூலிப்பதற்கும் பல்வேறு கட்ட தொழில்நுட்ப ரீதியான நடைமுறைகளை சென்னை மாநகராட்சி கையாண்டு வந்தது.

அதன் ஒரு பகுதியாகத்தான் ட்ரோன் அடிப்படையிலான ஜிஐஎஸ் தரவுகள் மூலமாகவும், செயற்கைக்கோள் தரவுகள் மூலமாகவும், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் ஜிஎஸ்டி துறைகளின் தகவல்களையும், அந்த உரிமையாளர்களுடைய சுயவிவரங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, முழுக்க முழுக்க தொழில்நுட்ப அடிப்படையில் இந்தத் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, அதற்குப் பிறகுதான் இந்த மறுமதிப்பீட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்தக் கண்டறிதலில், குறிப்பாக குடியிருப்பு பகுதிகளாகக் காட்டப்பட்டிருந்த பல்வேறு சொத்து உரிமையாளர்களும், வணிகச் செயல்பாடுகளுக்கு அந்தச் சொத்துக்களைப் பயன்படுத்தி இருப்பது இந்த நடைமுறையில் கண்டறியப்பட்டிருக்கிறது.

அதற்குப் பிறகுதான் இந்த மறுமதிப்பீட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதையும் படிங்க: MMDR சட்ட திருத்த மசோதா..! மாநிலங்களின் சுயாட்சி நிதி பறிபோகும் அபாயம்..! கனிமொழி MP எச்சரிக்கை.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share