×
 
☰

தீவுத்திடல் பட்டாசு கடைகள்... விரைவில் டெண்டர்..! தமிழக அரசு அறிவிப்பு..!!

சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க விரைவில் டெண்டர் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கான தற்காலிக கடைகளை ஒதுக்குவது தொடர்பான நீண்டகால பிரச்சினை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விவாதத்திற்கு வந்துள்ளது. சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த பல ஆண்டுகளாக தீவுத்திடலில் கடைகள் ஒதுக்கீட்டில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை எனவும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சாதகமாக செயல்படப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் சென்னையின் முக்கிய தெருக்களில் பட்டாசு விற்பனைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதற்கு மாற்றாக பாதுகாப்பான முறையில் விற்பனை செய்ய தீவுத்திடலில் தற்காலிக கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

2011 ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத்துறை டெண்டர் அடிப்படையில் கடைகளை ஒதுக்கி வருகிறது. இதனால் ஏற்கனவே அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டும் கடைகள் கிடைப்பதாகவும், புதியவர்களுக்கோ அல்லது சங்க உறுப்பினர்களுக்கோ வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கடைகள் ஒதுக்கக் கோரி கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்ட போதிலும் நடவடிக்கை இல்லை எனவும், இந்த ஆண்டு ஜூலை 14 மற்றும் 20 ஆம் தேதிகளில் அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.செப்டம்பர் 11 ஆம் தேதி அதிகாரிகள் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் வியாபாரிகளின் குறைகள் எழுப்பப்பட்டன. ஆனால் அவை ஏற்கப்படாததால் மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், கடைகள் வைப்பதற்கான நிரந்தர அங்கீகாரம் உள்ளவர்களை நிராகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பிரச்சினை தொடர்வதாகவும் தெரிவித்தார்.இந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, சுற்றுலாத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். தீவுத்திடலில் தற்காலிகமாக பேருந்து நிலையம் இயங்கி வருவதால் இடவசதி குறைவாக உள்ளது.

இதையும் படிங்க: 4,500 மெகா வாட் மின்சாரம்... பவர் கட்டிற்கு என்டு கார்டு போடும் விஜய் அரசு... வெளியானது ஹேப்பி நியூஸ்...!

எனவே இந்த ஆண்டு குறைவான எண்ணிக்கையிலான கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஆன்லைன் மூலமாக டெண்டர் விடப்படும் என தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.நீதிபதி ஆஷா, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஏன் கடைகள் ஒதுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். வழக்கு அக்டோபர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: தவெக ஆட்சியில் தொடரும் சர்ச்சை... கட்டி முடிக்கப்படாத மருத்துவமனைக்கு மீண்டும் புதிய டெண்டர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share