100 சவரன் நகைகள், சொகுசு கார் கொடுத்தும் போதல... திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம்...!
திருமணமாகி நான்கு மாதத்தில் மருமகன் செய்த வரதட்சனை கொடுமையால் தங்களது மகள் கவிதா உயிரிழந்து விட்டதாக ராணுவ மருத்துவர் நாகார்ஜுனா மீது சென்னை கோயம்பேட்டை சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி வேல்விழி தம்பதி புகார் அளித்துள்ளனர்.
திருமணமாகி நான்கு மாதத்தில் மருமகன் செய்த வரதட்சனை கொடுமையால் தங்களது மகள் கவிதா உயிரிழந்து விட்டதாக ராணுவ மருத்துவர் நாகார்ஜுனா மீது சென்னை கோயம்பேட்டை சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி வேல்விழி தம்பதி புகார் அளித்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தட்சிணாமூர்த்தி. இவருக்கு இவரது மனைவி வேல்விழி. இவர் வந்து கிருபானந்தா வாரியாரின் பேத்தி என கூறப்படுகிறது. மேலும் இவரது மகள் கவிதா . திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரியான ஓம் கணபதியின் மகன் நாகார்ஜுனா என்பவருக்கும் கவிதாவுக்கும் கடந்த மார்ச் மாதம் ஏழாம் தேதி திண்டுக்கல்லல் திருமணம் நடைபெற்றிருக்கிறது. அதனை தொடர்ந்து சென்னை ஜிஆர்டி ஹோட்டல்ல வரவேற்ப நிகழ்ச்சியும் நடைபெற்றிருக்கிறது. மணமகன் நாகார்ஜுனன் இந்திய ராணுவத்தில் மேஜர் பதவியில் மருத்துவராக பணி புரிந்ததாகவும் மணிப்பூரில் பணியாற்று வந்ததால் அவருக்கு கேட்ட வரதட்சனை கொடுத்து திருமணத்தை வரவேற்ப நிகழ்ச்சியும் பெண் தரப்பில் மிக விமரிசையாக செய்திருக்கிறார்கள்.
குறிப்பாக 100 சவர நகைகளும் அதேபோல மணமகனுக்கு சுமார் இரண்டர லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் மற்றும் 37 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஆகியவற்றை வரதட்சனையாக கொடுத்திருக்கிறார்கள். கடந்த ஜூன் 10ஆம் தேதி அன்று மணமக்கள் ஜபல்பூர்க்குச் சென்றுள்ளனர். அன்றைய தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் மணமகனின் தந்தை தட்சிணாமூர்த்தி உங்களுடைய மகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டது, மூளைக்கு செல்லும் சில நரம்புகள் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார் எனக்கூறியுள்ளார். இதையடுத்து கவிதாவின் பெற்றோர் ஜபல்பூர் ராணுவ மருத்துவமனைக்குச் சென்ற போது, அங்கு அசைவின்றி கிடந்த அவரது மகள் சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வெளியில் சொல்லாத சீக்ரெட்டும் இருக்கு... விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த எடப்பாடி பழனிசாமி...!
பின்னர் ஜபல்பூர் மன் ராணுவ மருத்துவமனையிலே அவருக்கு வந்து பிரேத பரிசோதனை எல்லாம் செய்து, மாப்பிள்ளை ஓம் நாகார்ஜூனாவே அவசர அவசரமாக சென்னை கொண்டு வந்து பெற்றோர் முன்னிலையில் நல்லடக்கம் செய்துள்ளார். மாப்பிள்ளையின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பிரதேச பரிசோதனை அறிக்கையை சோதித்த கவிதாவின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ஏனெனில் அதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் தான் கவிதா உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஜபல்பூர் காவல்நிலையத்தில் கவிதாவின் தந்தை புகார் அளித்திருக்கிறார்.
சட்டப்பூர்வ ஆலோசனைக்கு மேற்பட்டு வருவதாகவும் ஜபல்பூரில் இந்த சம்பவம் நடைபெற்றதாக அதனால அதுல வழுக்கு பதிவு செய்ய முடியுமா என்ற கோணத்தில சட்ட ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பெண்ணின் குடும்பத்தார் தரப்பில திருமண நிகழ்வுகள் மற்றும் திருமண வரவேற்பு அதுமட்டுமில்லா நடக்கக்கம் செய்ததும் இங்குதான் செய்திருப்பதாகவும் அதனால் அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் மணமகள் தரப்பில தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
திருமணத்தின் போதே 100 சவரன் நகைகள், வெள்ளி பொருட்கள் , 37 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் கொடுத்ததாகவும், ஆனால் திருமணமான இரண்டு மாதத்துக்குள்ளே பெண்ணிடமிருந்து மேலும் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப், ஆப்பிள் வாட்ச் போன்றவற்றை எல்லாம் வாங்கி இருப்பதாகவும், பெண் இறப்பதற்கு முன்பாக மருத்துவமனை கட்ட இடம் வாங்கி தர சொல்லி வற்புத்திதாகவும் அது தரவில்லை என்பதனால் தனது மகளை உளவியல் ரீதியாக துன்புறுத்தி, கடைசியில் கொலையே செய்துவிட்டதாக கவிதாவின் பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: பாக். ராணுவத்திற்கு உளவு பார்த்தேன்.. பல ஷாக் தகவல்களை சொன்ன 26/11 குற்றவாளி ராணா..!