×
 

சென்னையில் கள்ளநோட்டு கும்பல் முகாம்... களத்தில் இறங்கிய சிபிசிஐடி... மலேசியா மாஃபியாவுடன் தொடர்பா?

சென்னையில் ரூ.11 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: கைதான இருவரிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை

சென்னையில் ரூ.11 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரிடம், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு லாட்ஜில் ரூ.500 மதிப்பிலான கள்ளநோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவல்லிக்கேணி போலீசார் அந்த லாட்ஜில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சபீக் ரகுமான் என்பவரிடமிருந்து சுமார் ரூ.11 லட்சம் மதிப்பிலான ரூ.500 கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சபீக் ரகுமான் அளித்த தகவலின் அடிப்படையில், தஞ்சாவூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரையும் போலீசார் கைது செய்துதீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ என்ட்ரி... தடை நீங்கியதால் மீண்டும் சூடுபிடிக்கும் விசாரணை!

குறிப்பாக, இந்த கள்ளநோட்டு கும்பல் எவ்வாறு சென்னைக்குள் ஊடுருவியது, அவர்களுடன் வேறு யார் யார் தொடர்பில் உள்ளனர் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் தற்போது சிபிசிஐடி போலீசாரும் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, இந்த கள்ளநோட்டு கும்பலுக்கு மலேசியாவைச் சேர்ந்த கள்ளநோட்டு கும்பலுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டு தொடர்புகள் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதால், அந்த கோணத்தில் விசாரணை நடத்துவதற்காக சிபிசிஐடி அதிகாரிகள் இந்த வழக்கில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச தொடர்புகள் இருப்பது உறுதியானால், அதுதொடர்பான நடவடிக்கைகள் மற்றும் தேவையான சர்வதேச அறிவிப்புகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு சிபிசிஐடிக்கு இருப்பதால், இந்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சபீக் ரகுமான் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரிடம், இந்த கள்ளநோட்டுகள் எவ்வாறு கிடைத்தன, அவற்றை சென்னையில் ஏற்கனவே புழக்கத்தில் விட்டுள்ளனரா, இந்த மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: "HEAT WAVE"... உஷார் மக்களே..! எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை..? லிஸ்ட் இதோ..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share