×
 
☰

சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டதால் அதிர்ச்சி! நடுவழியில் தவித்த பயணிகள்! சேவை நிறுத்தம்!

தடம் புரண்ட ரயில் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தி, ரயில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் தெற்கு ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற புறநகர் மின்சார ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டதால், தாம்பரம் - கடற்கரை இடையிலான ரயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை நேரத்தில் வழக்கம்போல் ரயிலில் பயணம் மேற்கொண்ட ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில், கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை நோக்கி புறப்பட்டபோது இந்த சம்பவம் நடந்தது. ரயிலின் 5-வது பெட்டியின் சக்கரம் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து தாம்பரம் - கடற்கரை வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி வந்த சில மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பல்வேறு ரயில் நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க: புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! திடீர் திருப்பம்! ஐகோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு!

தடம் புரண்ட ரயில் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தி, ரயில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் தெற்கு ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக வழித்தடத்தில் வழக்கமான ரயில் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

காலாண்டு விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை முடிந்து பலர் சென்னைக்கு திரும்பியுள்ள நிலையில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்குள் வேலை மற்றும் பிற தேவைகளுக்காக காலை நேரத்தில் பயணிக்கும் மக்கள் அதிகம் என்பதால், ரயில் சேவை பாதிப்பு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு நோக்கி ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில் சேவை முழுமையாக எப்போது சீராகும் என்பது சீரமைப்புப் பணிகளின் நிலையைப் பொறுத்தே இருக்கும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: அக்.,11ல் சென்னை வரும் பிரதமர் மோடி! இளையராஜாவுக்கு கிடைக்கும் முக்கிய கவுரவம்! முழு விவரம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share