ஒரே நாளில் ரூ.1,280 சரிந்த தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் அதிரடி வீழ்ச்சி!
சென்னையில் இன்று காலை ரூ.320 மற்றும் மாலையில் ரூ.960 என ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 வரை தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து, சவரன் ரூ.1,09,760-க்கு விற்பனையாகிறது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் அடுத்தடுத்து இருமுறை குறைந்து, சவரனுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.1,280 அதிரடியாகச் சரிந்துள்ளது; இதனால் நகை வாங்குவோர் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் திங்கட்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியபோது, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனையானது. தொடர்ந்து சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் டாலர் மதிப்பு ஏற்ற இறக்கம் காரணமாக, மாலையில் தங்கம் விலையில் மேலும் அதிரடி மாற்றம் ஏற்பட்டது. மாலை நேர வர்த்தகத்தில் சவரனுக்கு மேலும் ரூ.960 மளமளவெனக் குறைந்தது.
இதன் காரணமாக, இன்று ஒரே நாளில் மட்டும் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,280 சரிவைக் கண்டுள்ளது. இந்த அதிரடி வீழ்ச்சியின் பலனாக, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,09,760 என்ற விலையிலும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,720 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: OMR-ல் உயிரை பதறவைத்த பள்ளம்..!! சாலையில் ஏற்பட்ட குழியில் சிக்கிய கார்..!! தப்பிய நபர்!!
தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக உயர்ந்து வந்த தங்கம் விலை, ஒரே நாளில் ரூ.1,000-க்கும் மேல் சரிவைச் சந்தித்துள்ளது நகைக்கடைகளில் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. பண்டிகைக் காலம் நெருங்கி வரும் வேளையில், தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் சரிவு பொதுமக்களுக்குப் பெரும் ஆறுதலை அளித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!