#Breaking சென்னையில் காலையிலேயே சீறிப்பாய்ந்த போலீஸ் தோட்டா... பிரபல ரவுடி சுட்டுப்பிடிப்பு...!
சென்னையில் ரவுடி சுட்டுப்பிடிக்கப்பட்டிருக்கிறார்.
சென்னையில் ரவுடி சுட்டுப்பிடிக்கப்பட்டிருக்கிறார். கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி விஜயகுமார் என்பவர் சென்னையில் தற்போது காவல் துறையினரால் சுட்டு பிடிக்கப்பட்டிருக்கிறார்.
சென்னை மந்தவெளி ரயில்வே மேம்பாலம் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளியான மௌலி என்ற இளைஞர் நேற்று முன்தினம் நடுரோட்டிலேயே பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் பெண் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்தது
இதையும் படிங்க: பகீர் சம்பவம்...!! பட்டப்பகலில் இளைஞர் சுட்டுக்கொலை.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்...!
இதனை அடுத்து இந்த வழக்கு தொடர்பாக அபிராமபுரம் போலீசார் தனிப்படை அமைத்து கொலை செய்த நபர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதில் அதே பகுதியை சேர்ந்த பிக் ஷோ என்கிற விஜயகுமார், கௌதம் உட்பட மூன்று நபர்கள் இந்த கொலையை செய்திருப்பதும், இதற்கு பின்னால் ஆறு நபர்கள் இருப்பதும் தெரிய வந்தது.
இதனை அடுத்து தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்தவர்களை, தீவிரமாக தேடி வந்தனர். நேற்று கௌதம் மற்றும் நிரஞ்சன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தக் கொலை வழக்கில் முக்கிய நபரான விஜயகுமார் தான் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இவரும் சரித்திர பதிவேடு குற்றவாளிதான் என்பதும் தெரிய வந்ததை அடுத்து, போலீசார் இந்த தலைமறைவாக இருந்து வந்த விஜயகுமாரை தீவிரமாக தேடி வந்தனர்.
இதனிடையே விஜயகுமார்.இந்திராநகர் ரயில் நிலையம் அருகே இருக்கக்கூடிய பகுதியில் பதுங்கி.இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அப்போது போலீசாரை பார்த்து தப்பிக்க முயன்ற விஜயகுமார் அவர்களைத் தாக்கு முற்பட்டதாக கூறப்படுகிறது. தாக்க முற்பட்டவுடன் உடனடியாக காவல் ஆய்வாளர் அம்பேத்கர் என்பவர் திடீரென அவரது தற்காப்புக்காக துப்பாக்கியை எடுத்து அவரது காலிலேயே சுட்டு பிடித்திருக்கிறார். விஜயகுமார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு சிகிச்சையானது வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி விஜயகுமார் மீது ஏற்கனவே இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில தெரிய வந்திருக்கிறது. மேலும் இது மட்டுமின்றி விஜயகுமார் தாக்கியதால் இடது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்ட காவலர் தமிழரசன் என்பவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில இதுவரை மொத்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கக்கூடிய நிலையில், மற்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: துபாயை உலுக்கிய தேஜஸ் விமான விபத்து: உயிரிழந்த விமானி நமன்ஷ் சியால் யார் தெரியுமா?