×
 

அச்சுறுத்தும் கல்லூரி மாணவர்கள் மோதல்..! சிறப்பு குழு அமைக்க ஐகோர்ட் பரிந்துரை..!

கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை வழங்கி உள்ளது.

மாநிலக் கல்லூரி மாணவர் ஒருவர், சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீனை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீப் சந்திரா வழங்கி இருந்தார். மேலும் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும் என இரண்டு கல்லூரி முதல்வர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும், மாணவ அமைப்புகளுக்கும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இது தொடர்பாக காவல்துறை சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில் கடந்த பத்து வருடங்களில் 231 மாணவர்கள் தொடர்புடைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. காவல்துறை மற்றும் உயர் கல்வித்துறை தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, பல தலைவர்கள் படித்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது வேதனை அளிப்பதாகவும் குற்றவாளிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: தவெக கொடியின் யானை சின்னம்! விஜய் பதிலளிக்க உத்தரவு

கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க கல்வியாளர்கள், மனநல ஆலோசர்கள், கல்வித்துறை உயரதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். மேலும், பள்ளிகளில் அடிக்கடி ஆசிரியர் பெற்றோர் கூட்டம் நடத்தி மாணவர்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்வு காண்பதற்கு நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.

இதையும் படிங்க: ED-ரெய்டு.. உச்ச நீதிமன்றத்திற்கு 139A கீழ் வழக்கை மாற்றக்கோரும் நடைமுறை  சரியா? சட்டம் என்ன சொல்கிறது? 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share