×
 
☰

"மூளையை சிதறவிடுவோம்"..! கோர்ட் வாசலில் சபதம்... ஐஸ் ஹவுஸ் அஜித் கொலையின் அதிர்ச்சி பின்னணி..!

ஹை ஹவுஸில் அஜித் என்ற இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகி உள்ளது.

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் நடந்த ஒரு கொடூரமான படுகொலை சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருபத்தெட்டு வயதான அஜித் என்ற இளைஞர் தனது தாயுடன் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது திடீரென தாக்குதலுக்கு உள்ளானார். இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரை சரமாரியாக வெட்டி தாக்கினர். இந்த தாக்குதலில் அஜித் உயிரிழந்தார். சம்பவத்தை தடுக்க முயன்ற அவரது தாய் சரசுவும் வெட்டுக் காயங்களுடன் காயமடைந்தார். இந்த விவகாரத்தில் ஹரிஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பான அதிர்ச்சி பின்னணி வெளியாகி உள்ளது. கொலை தொடர்பாக போண்டா ராஜேஷ் என்பவரை போலீசார் தேடி வரும் நிலையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதில் அஜித்தின் சகோதரருக்கும் ஹரிஷ்க்கும் ஏற்கனவே மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஹரிஷின் நண்பர் ராஜேஷ் அஜித் தரப்பு ஏற்கனவே கொல்ல முயன்றதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகில் பகிரங்கமாக மூளையை சிதற விடுவோம் என ஹரிஷ் தரப்பு கானா பாடல் வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் அஜித்தை கொல்லப் போவதாக இன்ஸ்டால் ஹரிஷ் தரப்பு மிரட்டி உள்ளனர். இந்த மிரட்டல் தொடர்பாக அஜித் காவல் நிலையத்திலும் புகார் அளித்ததாக தெரிகிறது. அஜித் புகார் அளித்த அதே காலகட்டத்தில் ஹரிஷின் சகோதரர் மற்றொரு வழக்கில் கைதானதாகவும் அஜித்திடம் பேச வேண்டும் என்று இரு பெண்கள் அழைத்துச் சென்ற நிலையில் வெளியே காத்திருந்த ஹரிஷ் மற்றும் ராஜேஷ் இருவரும் வெட்டி கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரெடி..! அக். 11 ல் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி..!

நேற்று நீதிமன்றத்தில் சகோதரர் ஆஜர் படுத்தப்பட்டபோது அவரை காணச் சென்ற ஹரிஷ் நீதிமன்ற வளாகத்திலேயே அஜித்தை கொலை செய்வோம் என்று சபதம் எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் அஜித்தை ஹரிஷ் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: அடடா!! மேயர் பிரியாவா இது!! கேமரா பார்த்ததும் வெட்கத்தில் சிவந்த கன்னம்!! வைரலாகும் அந்த தருணம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share