சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... நீர்வளத்துறை வெளியிட்ட முக்கிய அப்டேட் ...!
சென்னை ஏரிகளில் இருந்து முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளத மிக கனமழை பெய்தாலும் வெள்ளநீர் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டு கடலை சென்றடையும் என்றும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய தேவையில்லை என்றும் நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. மேலும் வங்ககடலில் உருவான காற்றழுத்த பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதால் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இன்றும் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக சற்று முன் 20.4 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்பதால் திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கனமழையின் எதிரொலியாக சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. ஏரிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு ஏரிகளில் இருந்து உபரி நீர் சிறுது சிறிதாக திறக்கப்பட்டு வருகிறது. உபரி நீரின் திறப்பால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து நேற்று இருந்த 1,800 கன அடியில் இருந்து 2,170 கன அடியாக அதிகரித்துள்ளது. 24 அடி நீர்மட்டத்தில் தற்போது 20.84 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. 3.64 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 2.8 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. முன்னெச்சரிக்கையாக 100 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பூண்டி ஏரியின் முழு கொள்ளளவான 35 அடியில் 33 அடியை எட்டியுள்ளது. பூண்டிக்கு நீர் வரத்து 2,510 அடியாகவும் உள்ளது. இதனை தொடந்து, பூண்டி ஏரியில் இருந்து 4,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. அதே போல், 3,300 மில்லியன் கனஅடி கொண்ட புழல் ஏரியில் தற்பொழுது 3,006 கன அடி நீர் நிரம்பி உள்ளது. மொத்தம் 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 19.97 அடி நிரம்பியதால் முதல் கட்டமாக 200 கன ஆடி நீர் வெளியேற்றப்பட்டது. ஏரிக்கு நீர்வரத்து 1500 கன அடியாக உள்ளதால், 2 மதகுகள் வழியே 500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உருவாகிறதா புயல்?... அடுத்த 12 மணி நேரத்தில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்... எங்கு கரையைக் கடக்கிறது?
சென்னை ஏரிகளில் இருந்து முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளத மிக கனமழை பெய்தாலும் வெள்ளநீர் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டு கடலை சென்றடையும் என்றும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய தேவையில்லை என்றும் நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மழைப்பொழிவு அதிகரித்திருக்கக்கூடிய சூழ்நிலையினால்தான் நீர்வளத்துறை சார்பிலே இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றார்கள். அதன்படி வழக்கமாக சென்னையில் மழைப்பொழிவு அதிகம் இருக்கும் பொழுதெல்லாம் அடையாறு, கொசஸ்தலை ஆறு உள்ளிட்டவற்றை ஒட்டி அமைந்திருக்கக்கூடிய பகுதி மக்களுக்கு ஆற்றில் நீர்ப்பு அதிகரித்து விடுமோ அதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் இருக்கும். அந்த அச்சம் இந்த முறை தேவையில்லை என்று குறிப்பிட்டு தமிழ்நாடு அரசினுடைய நீர்வளத்துறை தெளிவுப்ப்டுத்தியுள்ளது.
மழை தொடங்க போகின்றது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செம்பரம்பாக்கம், புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகளில் அணையினுடைய கொள்ளளவு மற்றும் தற்போதைய நீர் இருப்புக்கு இடையேயான இடைவெளி பராமரிக்கப்பட்டு வருகின்றது. எனவே மிக கனமழை பெய்தாலும் வெள்ளநீர் திறப்பின் அளவு என்பது கட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. எனவே அடையாளம் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் பாதுகாப்பாக நீர் சென்றடைந்து கடலை வந்தடையக்கூடிய விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கக்கூடிய மக்கள் எந்த வகையிலும் அச்சமடைய தேவையில்லை என்று நீர்வளத்துறை சார்பில் சொல்லப்பட்டிருக்கின்றது.
இதையும் படிங்க: ஆபத்து..! ஆபத்து...!! தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளத்திற்கு போட்டாச்சு பூட்டு... வெளியானது எச்சரிக்கை..!