×
 

அடையாளம் தெரியாத நபரால் தொடரும் தொல்லை! சென்னை மேயர் பிரியா புகரால் பரபரப்பு!

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் கமிஷனர் அமல் ராஜை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தனக்கு சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்ந்து தொல்லை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறி, சென்னை காவல் ஆணையர் அமல் ராஜை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்திற்கு நேரில் சென்ற மேயர் பிரியா, அடையாளம் தெரியாத சில நபர்கள் தொடர்ந்து தன்னை குறிவைத்து செயல்பட்டு வருவதாக புகாரில் தெரிவித்துள்ளார். குறிப்பாக, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறான தகவல்களை பரப்பி, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பதிவுகள் வெளியிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது அலுவலக தொலைபேசி எண்ணுக்கும் அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்ந்து அழைப்புகள் மற்றும் தொந்தரவுகளை ஏற்படுத்தி வருவதாகவும், இதனால் அலுவலக பணிகளும் பாதிக்கப்படுவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி செல்பி வீடியோ... ஒரே நாளில் 10 லட்சம் புதிய Followers, 30.5 கோடி Views! இன்ஸ்டாகிராமில் வெடித்த வைரல்!

இந்தச் செயல்களில் ஈடுபட்டுள்ள நபர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேயர் பிரியா காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்புபவர்களை கண்டறிய சைபர் குற்றப்பிரிவு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேயர் பிரியா அளித்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆணையர் அமல் ராஜ், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பதிவுகள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் தொடர்புடைய டிஜிட்டல் ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டறியும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக வலைதளங்கள் மூலம் அவதூறு பரப்புதல் மற்றும் தொலைபேசி மூலம் தொந்தரவு அளித்தல் தொடர்பாக மேயர் பிரியா அளித்துள்ள இந்தப் புகார் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்குப் பிறகு காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: டெல்லி நீட் போராட்டத்தில் வெளிநாட்டு சதி? பாகிஸ்தானைச் சேர்ந்த 480+ சமூக வலைதள கணக்குகளை முடக்கிய போலீஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share