போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... காலில் பாய்ந்த தோட்டா... பிரபல ரவுடி சுட்டுப்பிடிப்பு...!
சென்னை எண்ணூரில் தட்டு சத்யா கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை காவல்துறையினர் காலில் சுட்டுப்பிடித்தனர்.
சென்னை சரித்திர பதிவேடு குற்றவாளியான தட்டு சத்யா வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீசார் காலில் சுட்டு பிடித்துள்ளனர்.
சென்னையில் நேற்றிரவு சரித்திர பதிவேடு குற்றவாளியான தட்டு சத்யா என்கிற சத்யா என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக திருவற்றியூர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனென்றால் தட்டு சத்யா என்பவர் ஏற்கனவே சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதால், அவரை முன் விரோதம் காரணமாக வெட்டிக் கொன்றார்களா? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக விக்கி என்கிற குண்டு விக்கி என்பவர் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவரை பிடிப்பதற்காக மீன் பிடி துறைமுகம் பகுதியில் பதுங்கியிருந்தவரை பிடிப்பதற்காக ஆய்வாளர் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர் நவீன் என்பவர் சென்றுள்ளார்.
அப்போது விக்கியை பிடிக்க முயற்சி செய்யும் போத, திடீரென அவர் வந்து பெட்ரோல் குண்டு வீசி தாக்க முயற்சி செய்திருக்கிறார். இதனால தற்காப்புக்காக அந்த உதவி ஆய்வாளர் நவீன் என்பவர் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து விக்கி உடைய காலில் சுட்டு பிடித்திருக்கிறார். இதனால் காயமடைந்த விக்கி என்கிற குண்டு விக்கி என்பவர் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: கோவையில் வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை... 16 மணி நேரத்தில் நடந்த அதிரடி... தோண்ட, தோண்ட வெளியாகும் ஷாக்கிங் தகவல்கள்...!
படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது முன்விரோதம் காரணமாகத்தான் நிகழ்ந்திருப்பதாக போலீசார் தரப்பி; குற்றம் சாட்டப்பட்ட நிலையில தற்போது இந்த வழக்கு தொடர்பாக பிடிக்க சென்ற போது ஒருவர் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவமானது அப்பகுதியில பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: #BREAKING கோவையில் 13 வீடுகளில் அடுத்தடுத்து நடந்த பயங்கரம்... 3 வடமாநில கொள்ளையர்கள் சுட்டுப்பிடிப்பு...!