விடாது வெளுத்து வாங்கும் மழை... சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? - வெளியானது முக்கிய அறிவிப்பு...!
சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இரவு முதலே விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பணிக்கு செல்வோர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வோர் சிரமம் அடைந்து வருகிறார்கள். மக்களின் பாதுகாப்பு கருதி மெரினா கடற்கரைக்கு செல்ல இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மெரினா கடற்கரை நுழைவு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த டிட்வா புயலானது நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னையிலிருந்து 90 கிலோமீட்ட தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக நேற்று இரவு முதலே சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையானது விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரைக்கும் மழை பொழிவு குறைவா இருந்த போதும் கூட காற்றினுடைய வேகம் என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதேபோல கடல் அலைகளும் சீற்றமாக காணப்படுகிறது. நேற்றைய தினம் டிட்வா புயலின் பொழுது பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே வர வேண்டாம். என அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் அதையும் மீறி நேற்றைய தினம் புயல் சமயத்தில் மக்கள் அதிக அளவிலான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். இதனால் நேற்று மதியம் முதலே மெரினா கடற்கரை நுழைவு வாயில்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னைக்கு மிக அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால், நேற்று இரவு முதலே நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதையும் படிங்க: மாணவர்கள் கவனத்திற்கு... நாளை தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை...! முக்கிய அறிவிப்பு..!
இதனிடையே, இன்றைய தினம் எந்தவிதமான ஒரு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்படாத சூழலில் சென்னையில நேற்று இரவு முதலே நகரின் பல்வேறு பகுதிகளில் மழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாப்பூர், மந்தவெளி, நுங்கம்பாக்கம், காமராஜர் சாலை, சேப்பாக்கம், அண்ணா சாலை, சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை என்பது பெய்து வருகிறது. பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, தச்சூர், சோழவரம், செங்குன்றம், புழல், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம் சுற்றுவட்டார இடங்களில் பரவலாக அதிகாலை முதல் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகின்றது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதலே விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால், சென்னையில் இருக்கக்கூடிய பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற ஒரு கேள்வி எழுந்தது. இந்நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் இன்று செயல்படும் எனவும் ஆட்சியர் அலுவலக விழாகத்திலிருந்து தகவல்கள் வெளியாக இருக்கின்றன. சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரக்கூடிய சூழலிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை அவை வழக்கம் போல் செயல்படும் என்ற அறிவிப்பு வெளியாக இருப்பது மாணவர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
இதனால் இன்று பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லக்கூடிய மாணவர்களும், வேலைக்கு செல்லக்கூடிய நபர்களும், அதேபோல இருசக்கர வாகன ஓட்டிகளும் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING: நாகை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு விடுமுறை... முழு விவரம்...!