×
 

திமுக கொடி தீ வைத்து எரிப்பு! தலைமை செயலகம் முன் பகீர்!! போலீஸ் ஏட்டு அதிரடி கைது!

சென்னை தலைமை செயலகம் முன் திமுக கொடியை தீயிட்டு எரித்த போலீஸ் ஏட்டு கோதண்டபாணி கைது செய்யப்பட்டார்.

சென்னை: சென்னை தலைமை செயலகத்தின் முன்பு இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டேரி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டு பணியில் இருக்கும் கோதண்டபாணி, திமுக கொடியை தீயிட்டு எரித்த சம்பவம் அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோதண்டபாணியின் மகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கால் வலி ஏற்பட்டது. எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தபோது, தவறான சிகிச்சை காரணமாக மகளின் கால் பாதம் அகற்றப்பட்டதாக அவர் கூறி வருகிறார். 

இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி பல ஆண்டுகளாக புகார் அளித்து வந்த அவர், இன்று காலை 9 மணியளவில் தனது மகளுடன் போலீஸ் சீருடையில் தலைமை செயலகத்துக்கு வந்தார்.

இதையும் படிங்க: விசிகவினர் கோழைத்தனமான தாக்குதல்!! கொந்தளிக்கும் எல்.முருகன்! ஏபிவிபி மாணவர் தாக்குதல் எதிரொலி!

காவலுக்கு இருந்த போலீசார் அசட்டையாக இருந்த நேரத்தில், கோதண்டபாணி திமுக கொடியை தீயிட்டு எரித்தார். இதைப் பார்த்த அங்கிருந்த போலீசார் பதறிப்போய் ஓடி வந்து, பற்றி எரிந்த கொடியை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். உடனடியாக கோதண்டபாணியை கைது செய்தனர். கைது செய்யப்பட்டபோது அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட கோதண்டபாணியிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமை செயலகம் முன்பு போலீஸ் சீருடையில் இருந்த ஒரு அதிகாரியே திமுக கொடியை எரித்த சம்பவம், அரசு அலுவலர்கள் மத்தியில் பெரும் பேச்சாக மாறியுள்ளது.

கோதண்டபாணி தனது மகளுக்கு ஏற்பட்ட மருத்துவ பாதிப்புக்கு நீதி கேட்டு நீண்டகாலமாக போராடி வருவதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அரசு அலுவலகத்தின் முன்பு சீருடையில் இருந்தபடி கொடியை எரித்த செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் சென்னை முழுவதும் வேகமாக பரவி, அரசியல் மற்றும் அரசு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா!! தாமதம் துரதிர்ஷ்டவசமானது!! மோடி உருக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share