×
 

நாளைக்கு சரக்கு கிடையாது! சென்னை முழுவதும் டாஸ்மாக், பார்கள் மூடல்!! மீறினால் கடும் நடவடிக்கை!

அரசு உத்தரவை மீறி மதுபான விற்பனை அல்லது அனுமதியற்ற செயல்பாடுகளில் ஈடுபடும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது மதுபான விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மிலாது நபி திருநாளை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் நாளை, புதன்கிழமை, அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் சென்னையில் நாளை மதுபான விற்பனை முழுமையாக தடை செய்யப்படுகிறது.

சென்னை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மிலாது நபி திருநாளை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பண்டிகை நாட்களில் மதுபான விற்பனையை தடை செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பிப்பது வழக்கம். அதன்படி, சென்னையில் நாளைய தினம் மதுபான விற்பனை நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் நாளை கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும். அதேபோல், டாஸ்மாக் கடைகளைச் சார்ந்த பார்களும் செயல்பட அனுமதி இல்லை.

இதையும் படிங்க: அரசாங்கத்தின் தொழிலாளர் கொள்கை என்ன? ஆகஸ்ட் 28-ல் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

இதுதவிர, எப்.எல்.2 உரிமம் கொண்ட பார்கள், எப்.எல்.3 உரிமம் பெற்ற ஓட்டல்களுடன் இணைந்த பார்கள் மற்றும் எப்.எல்.3 (ஏ), எப்.எல்.3 (ஏ.ஏ.) முதல் எப்.எல்.11 வரை பல்வேறு உரிமங்களின் கீழ் செயல்படும் மதுபான விற்பனையகங்கள் மற்றும் மதுபானக் கூடங்களும் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் எந்த வகையிலும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறி மதுபான விற்பனை அல்லது அனுமதியற்ற செயல்பாடுகளில் ஈடுபடும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது மதுபான விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இதனால், வழக்கமாக டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு செல்லும் சென்னைவாசிகள் நாளைய தினம் அவை இயங்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, பண்டிகை நாளை முன்னிட்டு கடைசி நேரத்தில் மதுபானம் வாங்க முயற்சிப்பவர்கள் அரசு உத்தரவை மீறி செயல்படும் சட்டவிரோத விற்பனையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

மிலாது நபி திருநாளை முன்னிட்டு சென்னையில் அமல்படுத்தப்படும் இந்த உத்தரவு நாளை முழுவதும் மதுபான விற்பனை தொடர்பான நடவடிக்கைகளுக்கு பொருந்தும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: டாஸ்மாக் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் செந்தில்பாலாஜி ஆஜர்! அதிகாரிகள் விசாரணை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share