×
 

இந்திய செஸ் எதிர்காலத்தின் அடையாளம்... குகேஷுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

நார்வே செஸ் தொடரில் மூன்றாம் இடம் பிடித்த இந்திய செஸ் வீரர் குகேஷ்க்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நார்வே செஸ் தொடரில் அந்நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். அதிக புள்ளிகள் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கருவானாவை எதிர்த்து விளையாடிய குகேஷ், தான் செய்த தவறால் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். 

இதன் மூலம் அவர் மூன்றாவது இடத்திற்கு சென்றார். 10 சுற்று போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் முதல் இடம் பிடித்தார். கருவானா 15.5 புள்ளிகளுடன் 2-வது இடமும், குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பெற்றனர். 

இதையும் படிங்க: புரோக்கர் வேலை திமுக IT WING-ன் குலத்தொழில் போல! அதிமுக சரமாரி சாடல்..

இந்த நிலையில் நார்வே செஸ் தொடரில் மூன்றாம் இடம் பிடித்த இந்திய செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது வாழ்த்துச் செய்தியில், 2025-ம் ஆண்டு நார்வே செஸ் போட்டியில் 14.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்த நமது வீரர் டி.குகேஷ் குறித்து பெருமை கொள்கிறோம். திறமை மற்றும் உறுதியுடன், இந்தியாவின் செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக குகேஷ் தொடர்ந்து பிரகாசித்து வருகிறார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஞானசேகரன் TO தெய்வச் செயல்.. திமுக ஆபாச வாதிகளின் உறைவிடம்! அதிமுக காட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share