×
 

நாளை வேலை நிறுத்தப் போராட்ட; சம்பளம் நிறுத்தம்... அரசு ஊழியர்களுக்கு பறந்த எச்சரிக்கை!!

நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் சம்பளம் நிறுத்தப்படும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏஐடியூசி, சிஐடியூ, ஐஎன்டியூசி,  எச்எம்எஸ், தொமுச உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களும், துறை வாரியான சம்மேளனங்களும் ஒருங்கிணைந்து பாஜக ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகின்றன. தொழிற்சங்கங்கள், தற்போது, விவசாயிகள் ஐக்கிய முன்னணியுடன்  (எஸ்கேஎம்) இணைந்து வரும் ஜூலை 9 ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.

கட்டமைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும். நிரந்தரத் தன்மை வாய்ந்த தொழில்களில் தினக்கூலி, ஒப்பந்தக் கூலி முறை பணி நியமனத்தை தடை செய்ய வேண்டும். வெளியிடப் பணி முறையை கைவிட வேண்டும். விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்கள் அனைத்துக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதை சட்டபூர்வமாக உறுதி செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்... திருமண முன்பணத்தை உயர்த்தியது தமிழக அரசு; எவ்வளவு தெரியுமா?!!

விவசாயிகள் போராட்டக் காலத்தில் போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வேலை நாட்களையும், குறைந்தபட்ச ஊதியத்தையும் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாளை போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் சம்பளம் நிறுத்தப்படும். மேலும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: அரசு ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யணும்.. தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share