சீனா பெண்.. தமிழக பையன்.. சிங்கப்பூரில் மலர்ந்த காதல் கதை - பாரம்பரிய முறை டும்..டும்...!
சிங்கப்பூரில் மலர்ந்த காதல் வந்தவாசியில் தமிழ் முறைப்படி கிராமத்தில் எளிய முறையில் நடந்த திருமணம் நிறைவேறியது.
சீனா பெண்ணுக்கும் தமிழ் நாட்டை சேர்ந்த ஆணுக்கும் தமிழ் முறைப்படி எளிய முறையில் கிராமத்தில் நடந்த திருமணம் - கிராமத்தில் புதிய வீடு கட்டி அதில் நடந்த எளிமையான முறையில் செய்து கொண்ட திருமணம் - சிங்கப்பூரில் காதல் மலர்ந்தது தமிழ் நாட்டில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை கிராமத்து மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமிழ் முறைப்படி நடந்த சீனப் பெண்ணின் திருமணம், சிங்கப்பூரில் மலர்ந்த காதல் வந்தவாசியில் தமிழ் முறைப்படி கிராமத்தில் எளிய முறையில் நடந்த திருமணம் நிறைவேறியது.
வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தை தருமன் இவரது மனைவி நாகரத்தினம் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களது மகன் வெங்கடேஷ் ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்தவர், ஆஸ்திரேலியாவில் பொறியாளர் படிப்பு முடித்து கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார் . அதே நிறுவனத்தில் HR அதிகாரியாக வேலை செய்த சீனாவை சேர்ந்த வாங் யாயா என்பவருடன் காதல் மலர்ந்தது.
இதையும் படிங்க: துரைமுருகன் இருக்கையில் அன்பில் மகேஷ்... நண்பன் மூலம் அப்பாவுக்கு உதயநிதி சொன்ன சீக்ரெட் மெசேஜ்...!!
ஐந்து வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவரும் சிங்கப்பூரில் மேற்கத்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் வாங் யாயா தனது கணவரின் கிராமத்தில் தமிழ் முறைப்படி சொந்த கிராமத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்று அவரது மனைவி ஆசைப்பட்டார். எனவே மனைவியின் ஆசையை வெங்கடேஷ் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் புதிதாக சொந்த வீடு கட்டி அதில் காலை கணபதி ஹோமம் செய்து பிறகு மறைவின் ஆசைப்படி உறவினர்கள் மற்றும் கிராமத்து மக்களுடன் தமிழ் முறைப்படி எளிய முறையில் சீன நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும், தமிழ் நாட்டை சேர்ந்த ஆணுக்கும் திருமணம் நடந்தது.
பின்னர் ஒருவரை ஒருவர் தமிழ் முறைப்படி இரண்டு பேரும் மாலை மாற்றி கொண்டனர். இதை தொடர்ந்து மணமகன் வெங்கடேசனின் பெட்றோர்களிடம் ஆசி பெற்றனர். பின்னர் கிராமத்து மக்கள் மற்றும் உறவினர்களிடம் ஆசி பெற்றார்.
பின்னர் பூஜை அறையில் பூஜை செய்து இருவரும் மனதார வணங்கினர். பின்னர் சீனா நாட்டை சேர்ந்த வாங்யாயா கணவரின் காலில் விழுந்து ஆசி வாங்கினார். பின்பு உறவினர்கள் அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தனர். சீனப் பெண்ணான வாங் யாயாவின் தமிழ் நாட்டின் மீதுள்ள பற்றை கிராம மக்கள் வியந்து பாராட்டினர்.
இதையும் படிங்க: பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு! மிசோரம் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!