×
 

அன்பு, அமைதி, சத்தியம் நிலைக்க... EPS கிறிஸ்துமஸ் தின வாழ்த்து...!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் பல கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களும் ஆர்வத்துடன் எதிர்நோக்கும் ஒரு மாபெரும் கொண்டாட்டமே கிறிஸ்துமஸ் பண்டிகை. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் இப்பண்டிகை, ஆண்டுதோறும் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீடுகளும் தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் கிறிஸ்துமஸ் மரங்கள் அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

கோலாகலமாக இன்று கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. பல இடங்களில் சிறிய குடில்கள் முதல் பெரிய ராட்சத குடில்கள் வரை அமைக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அனைவருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கருணையின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த திருநாளை, கிறிஸ்துமஸ் பெருநாளாகக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும், எனது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். 

இதையும் படிங்க: 2026ல் NDA ஆட்சி தான்… ஊழல் திமுக ஆட்சியை அகற்றுவோம்… பியூஷ் கோயல் சூளுரை…!

மனித வாழ்க்கையில் நம்பிக்கை என்னும் சக்தியைப் பெற்றுவிட்டால், இந்த உலகில் முடியாதது எதுவும் இல்லை என்ற இயேசுபிரான் அவர்களுடைய போதனைக்கு ஏற்ப, ஒவ்வொரு மனிதரும் நம்பிக்கையுடன் செயல்பட்டால், அவர்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்று தெரிவித்தார். அன்பால் உலகை ஆட்கொண்ட தேவகுமாரனாகிய இயேசுபிரான் அவதரித்த இந்த நன்னாளில், உலகெங்கும்,அன்பு-அமைதி-சத்தியம் நிலைக்கவும், சகோதரத்துவம் தழைக்கவும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இயேசுநாதர் பிறந்தநாள்..!! அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share