தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?
உளுந்தூர்பேட்டையில் திமுக மற்றும் தவெக கட்சியினர் இடையே மோதல் காவல் நிலையம் கதவுகள் இழுத்துப் பூட்டப்பட்டதால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுதந்திர தின மணிக்கூண்டு திடல் அருகில் பொதுமக்கள் நலன் கருதி கடந்த திமுக ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் காத்திருப்போர் கூடம் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்த நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பணிகள் முடிவடைவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் முடிக்கப்பட்ட பணிக்கான தகவல் பலகை வைக்கும் பணி நடைபெற்றது. அந்த பலகையில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் அப்போதைய திமுக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பெயர் அதில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அந்த பெயர் பலகையை வைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது கடந்த திமுக ஆட்சியின் போது செய்யப்பட்ட பணி என்றும் அதற்கான பெயர் பலகை வைப்பதில் என்ன பிரச்சனை என திமுகவினர் கேட்டபோது. தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் வைக்கக்கூடாது என்றும் தற்போதைய தமிழ்நாடு முதல்வர் படம் வைக்க வேண்டும் என கூறியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் காவல் நிலையம் எதிரில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இதையும் படிங்க: 152 மருத்துவ இடங்கள் சரண்டரா..? முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் அவசர கடிதம்..!!
அப்போது பெயர் பலகையை தூக்க வந்த பிரேம் வாகனத்தில் சாவியை த வெ க நபர்கள் எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் திமுக மற்றும் த வெ க நிர்வாகிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் எதிரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இரண்டு தரப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தற்போது காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மற்ற நிர்வாகிகள் காவல் நிலையம் உள்ளே சொல்லாத வகையில் காவல் நிலையம் முன்பக்க கதவுகள் பூட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: இன்பதுரை வெற்றி செல்லாது... அதிரடி தீர்ப்பு..! தலையில் இடியை இறக்கிய ஹைகோர்ட்..!