×
 

“ஏய் கொடிய கழட்டு...”... ராமதாஸ் ஆதரவாளரை மிரட்டிய அன்புமணி ஆதரவாளர்கள்..!!

பாமக கட்சி இராமதாஸ் வேட்பாளர் காரில் பாமக கொடி  மற்றும் வேட்பாளர் அணிந்து இருந்த  பாமக துண்டுக்கு எதிர்ப்பு  தெரிவித்து  அன்புமணி அணியினருக்கும், ராமதாஸ்  அணியினருக்கும் கடும் வாக்குவாதம்

 திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த அன்புமணி ஆதாரவாளருக்கும் ராமதாஸ் ஆதார்வாளர்களுக்கும் கடும் வாக்குவாதம்.  ராமதாஸ் வேட்பாளர் காரில் இருந்த பாமக  கொடியையும், வேட்பாளர் அணிந்து  இருந்த பாமக துண்டை  பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு ஆதவார்கிடையே கடும் வாக்குவாதம்.போலீசார் சமரச முயற்சி செய்து  அனுப்பி வைத்தனர். சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கோரி ராமதாஸ் தரப்பு வேட்பாளர் முரளி சங்கர் சாலை மறியல் .சிறிது நேரம் போக்குவரத்து  பாதிப்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

வந்தவாசி (தனி)சட்டமன்ற  தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ராமதாஸ் தரப்பு வேட்பாளராக அக்கட்சியின் பொதுச் செயலாளராக உள்ள முரளி சங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.   இந்த நிலையில் வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முரளி சங்கர் வந்திருந்தனர். 

 அப்பொழுது வேட்பாளர் முரளி சங்கர் கழுத்தில் அணிந்திருந்த பாமக  துண்டும்,  அவர் வந்த காரின் பாமக கொடி பாட்டாளி பயன்படுத்தியதற்கு அன்புமணி ஆதார் காரர்கள் அங்கு வந்து ராமதாஸ் ஆதார் காரர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக ராமதாஸ் தரப்பு ஆதார் பாலர்கள் காரில் இருந்த  பாமக கொடி மற்றும் வேட்பாளர் முரளி சங்கர் அணிந்திருந்த பாமக தொண்டு அவர்களாகவே எடுத்தனர்.

இதையும் படிங்க: களையெடுக்கும் ராமதாஸ்! புதுச்சேரி நிர்வாகிகள் கலக்கம்! வேறு கட்சிகளுக்கு தாவ திட்டம்!!

 இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்த போலீசார் அன்புமணி தரப்பு ஆதர்வாளர்களை  மற்றும் ராமதாஸ் தரப்பு ஆதர்வாளர்களை  சமாதானம் செய்து அன்புமணி தரப்பை ஆதர்வாளர்களை அனுப்பி வைத்தனர். 

பின்னர் ராமதாஸ் தரப்பு வேட்பாளர் முரளி சங்கர் ஆதர்வாளர்களுடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார் . ராமதாஸ் தரப்பு நிர்வாகிகள்,ன வந்தவாசி காவல் நிலையம் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம்  உரிய முறையில் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ராமதாஸ் தரப்பு வேட்பாளர் முரளி சங்கர் சாலை மறியலில்  ஈடுபட்டார்  அப்போது வேட்பாளர் முரளி சங்கர் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் போலீசார் சமரசம் செய்து  அனுப்பி வைத்தனர். இதனால் வந்தவாசியில் பெரும் பரபரப்பு நிலவியது ‌

இதையும் படிங்க: சசிகலா - ராமதாஸ் இடையே கூட்டணி முறிவு...?! - ஒரே ஒரு சின்ன சொதப்பலால் சிதைந்த தேர்தல் வியூகம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share