எல்லாம் சரி... தரமா இருக்கா முதல்வரே? காலை உணவு திட்டத்தை விமர்சித்த அதிமுக..!
முதல்வரின் காலை உணவு திட்டம் தரமாக இருக்கிறதா என அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின், பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் ஆகியோர் இன்று திட்டத்தை தொடங்கி வைத்தனர். இதன்மூலம் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
அதிமுக காலை உணவு திட்டத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி விமர்சித்து உள்ளது. அதிமுக அரசு கொண்டு வந்த திட்டத்திற்கு, காலை உணவு திட்டம் என பெயர் பலகையை மாற்றி, விளம்பரக் காட்சி எடுத்து புகைப்படவிழா நடத்தும் இந்த அரசு, தினந்தோறும் மாணவர்களுக்கு உணவு சென்று சேருகிறதா., அந்த உணவில் தரமும் சுகாதாரமும் இருக்கிறதா என கேள்வி எழுப்பி உள்ளது.
படிக்கும் குழந்தைகளின் உணவில் புழு பூச்சி உள்ளது என்று கூறும் குற்றச்சாட்டை ஒருநாளாவது முதல்வர் சிந்தித்ததுண்டா என்றும் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. மக்களின் மனதில் எழும் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தராமல், வெளி மாநில முதல்வரை அழைத்து வந்து மேடையில் போஸ் கொடுப்பதே தற்போதைய முதலவரின் பணி என்றும் விமர்சித்து உள்ளது.
இதையும் படிங்க: ஆம்புலன்ஸை தாக்கினால் 10 வருஷம் ஜெயில்... தமிழக அரசு எச்சரிக்கை..!
மாணவர்களின் நலனை விட அரசியல் விளம்பரம் செய்வதை பணியாக கொண்டுள்ள இந்த முதல்வர் ஒரு பொம்மை முதல்வர் தான் என்றும் சாடியது.
இதையும் படிங்க: திமுகவிடம் பணம் வாங்கிய கூட்டணி கட்சிகள்!! லிஸ்ட் போட்டு மாட்டிவிட்ட முத்தரசன்!! சங்கடத்தில் உ.பிக்கள்!!