சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!
சிப்காட் தனியார் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்த விபத்தில் உயிரிழந்த பீகார் இளைஞரின் குடும்பத்திற்கு முதல்வர் விஜய் ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 3 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்முடிப்பூண்டி சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இன்று நேரிட்ட பயங்கர கொதிகலன் (Boiler) வெடிப்பு விபத்தில் சிக்கி உயிரிழந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் தொழிலாளியின் குடும்பத்திற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடியாக இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் அவர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கும்முடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்தத் தனியார் தொழிற்சாலையில், வழக்கம்போல் தொழிலாளர்கள் தங்களது பணிகளில் ஈடுபட்டிருந்த போது, அதிகப்படியான அழுத்தம் காரணமாக அனல் கக்கும் கொதிகலன் திடீரெனப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வடமாநிலத் தொழிலாளி பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தார். மேலும், அருகில் பணியில் இருந்த 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை அறிந்த உடனே மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்ட முதலமைச்சர் விஜய், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வரும் 3 தொழிலாளர்களுக்கும் அதிநவீன மற்றும் தரமான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதலமைச்சர், காயமடைந்தவர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என தவெக அரசு எச்சரித்துள்ள நிலையில், இந்த விபத்து குறித்து கும்முடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரப் புலனாய்வு விசாரணையில் இறங்கியுள்ளனர்.
:
இதையும் படிங்க: பாகிஸ்தானில் சோக சம்பவம்..!! 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்..!! 40 பேர் பரிதாப பலி..!!
இதையும் படிங்க: ராஜஸ்தானில் கோர விபத்து..!! லாரி மீது பயங்கரமாக மோதிய பேருந்து..!! 8 பேர் உடல் கருகி பலி..!!