கடந்த ஆட்சி கால முறைகேடுகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து முடிவெடுப்பார்: நிதி அமைச்சர் மரிய வில்சன்!
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் குறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் விரிவான ஆய்வு செய்து முடிவெடுப்பார் என நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற பல்வேறு நிதி சார்ந்த முறைகேடுகள் மற்றும் ஊழல் புகார்கள் குறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முழுமையாக ஆய்வு செய்து உரிய முடிவுகளை எடுப்பார் என்றும், அதுகுறித்த விபரங்கள் விரைவில் அனைவருக்கும் தெரியவரும் என்றும் நிதி அமைச்சர் திரு. மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர் மரிய வில்சன், மாநிலத்தின் நிதி நிலைமை மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். அப்போது, கடந்த ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: "மிசாவையே பார்த்தவன் நான், இந்த ரெய்டுக்கு பயப்பட மாட்டேன்!" லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு குறித்து எ.வ.வேலு பேட்டி!
இதற்குப் பதிலளித்த நிதி அமைச்சர், "கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிதி சார்ந்த முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் குறித்த பல்வேறு புகார்கள் தற்பொழுது அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. இது தொடர்பாகத் தேவையான அனைத்து விபரங்களும் சேகரிக்கப்பட்டு, அவை குறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களே நேரடியாக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வுகளின் முடிவில், மக்களின் வரிப்பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அதன் மீது சட்டப்படியான உரிய முடிவுகளை முதலமைச்சர் எடுப்பார். இதுகுறித்த முழுமையான விபரங்கள் மிக விரைவில் பொதுமக்களுக்குத் தெரியவரும்" என்று விளக்கமளித்தார்.
அரசு கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் பெரும் குளறுபடிகள் நடந்துள்ளதாகக் கூறி, இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ள செய்திகள் விவாதிக்கப்பட்டு வரும் வேளையில், கடந்த திமுக ஆட்சியின் முறைகேடுகள் குறித்து நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ள இந்தத் தகவல் கோட்டை வட்டாரத்திலும் ஒட்டுமொத்த அரசியல் தளங்களிலும் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: திருவண்ணாமலை கோயில் பணி நியமன முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு!