×
 

கொளுத்தும் வெயில்... பள்ளிகள் திறப்பு தள்ளி போகிறதா.? முதல்வர் விஜயுடன் அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை..!

பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் விஜயுடன் அமைச்சர் ராஜ்மோகன் நடத்துகிறார்.

2026-ஆம் ஆண்டு கோடைக் காலத்தில், வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உள் மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, சில இடங்களில் 108 ஃபாரன்ஹீட் வரை பதிவாகியுள்ளது. வானிலை ஆய்வு மையம் அடிக்கடி வெப்ப அலை எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது.

இந்த வெயில் வெறும் தொல்லை மட்டுமல்ல. அது பொது சுகாதாரம், விவசாயம், பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கை ஆகிய அனைத்தையும் பாதிக்கும் ஒரு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. 

தமிழகத்தின் உள் மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை போன்ற பகுதிகள் வெப்பத்தின் மையங்களாக மாறியுள்ளன. தற்போது கோடை விடுமுறை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகளை பெருமளவு பாதிக்கும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: அதிமுக கோட்டையில் அடுத்தடுத்து ஓட்டை.... இபிஎஸ் தலையில் இறங்கியது பேரிடி... தவெகவுக்கு அடித்த ஜாக்பாட்...!

இந்த நிலையில், பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் உடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று ஆலோசனை நடத்துகிறார். திங்கட்கிழமை நான்காம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் முதலமைச்சருடன் முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: செய்யாத பணிக்கு 15,80,000-யை ஆட்டையைப் போட்ட அதிகாரி... சிக்கலில் சிக்கிய தவெக அமைச்சர்... ஒப்பந்ததாரர் பகீர் குற்றச்சாட்டு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share