×
 

குட்நியூஸ்...!! விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்தொகை... முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு...!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிச.15 முதல் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தார்.

தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்ள 2 நாள் அரசுமுறை பயணமாக கோவை வந்த முதலமைச்சர், நேற்றைய தினம் கோவை  மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு  செம்மொழி பூங்கா உள்ளிட்டவைகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அதன் பின் 2ம் நாளான இன்று காலை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜெயராமபுரத்தில் சுதந்திர போராட்ட வீரரும்,  மாவீரன் தீரன் சின்னமலையின் படை தளபதியாக இருந்த மாவீரன் பொல்லானுக்கு செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 4 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட  திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து ஈரோடு, சோலார் பேருந்து நிலையத்தில்  நடைபெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ரூ.605 கோடி மதிப்பிலான முடிவுற்ற  திடப்பணிகளை திறந்து வைத்து,  1,84,491 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இதையும் படிங்க: இந்திய அரசியலமைப்புச் சட்டம்..!! அனைத்து பள்ளிகளிலும் இத செய்யணும்..!! முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிச.15 முதல் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தார். டிசம்பர் 10ஆம் தேதிக்குள் ஈரோட்டிற்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேறும் என்றும்,  அத்தனை அறிவிப்புகளையும் திமுக அரசு நிறைவேற்றி வருவதாகவும் கூறினார். 

ஈரோடு மாவட்டத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.9,327 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 
தமிழகத்திற்கான திட்டங்களை நிராகரிக்கும் போது மத்திய அரசு கம்பி கட்டும் கதை சொல்வதாக கடுமையாக சாடினார். பாஜக ஆட்சியில் தான் பஹல்காம் தாக்குதல், செங்கோட்டை தாக்குதல் நடந்துள்ளது. வரி வசூலிப்பதற்கு மட்டும் தமிழ்நாடு; நிதி ஒதுக்கும் போது பட்டை, நாமம் போடுகிறது பாஜக என்றார். 

மக்களுக்கும், திமுக அரசுக்கும் இடையேயான பாசப் பிணைப்பை கெடுக்க சதி செய்கிறார்கள் என்றும், வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருப்பதை அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். முதல்வர் வருகையை ஒட்டி மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் மற்றும் கோவை சரக டிஐஜி சசிமோகன் தலைமையில்  1000த்தும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: Go Back Stalin... கையில் கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் குதித்த பாஜக இளைஞரணி... அலோக்காக தூக்கிய போலீஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share