பக்கா மாஸ்...!! - விடிந்ததுமே ஃபுல் எனர்ஜியோடு திருவண்ணாமலையில் களமிறங்கிய ஸ்டாலின்... மக்களோடு மக்களாக வாக்கு சேகரிப்பு..!
தமிழ்நாடு முதல்வர் திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு நடந்தே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளதால் அரசியல் களம் கனலாய் தகித்து வருகிறது. கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் வரித்துக் கட்டிக்கொண்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மார்ச் 30ம் தேதி கொளத்தூரில் வேட்புமனு தாக்கல் செய்த கையோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சூறாவளி பிரசாரத்தை தொடங்கியுள்ளார். திருச்சி, கரூர், ஈரோடு, கோயம்புத்தூர்,மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலம், திண்டுக்கல், கன்னியாகுமரி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று திருவண்ணாமலையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
திருவண்ணாமலை மாட வீதியில் அமைந்துள்ள தேரடி வீதியில் இருந்து காந்தி சிலை, சின்ன கடை தெரு வழியாக பழைய பேருந்து நிலையம் வரை நடந்தே சென்று பொது மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். சாலையின் இரு புறங்களிலும் நின்று கொண்டு இருந்த பொது மக்களை சந்தித்து உதயசூரியனுக்கு வாக்களிக்க கையசைத்தபடியும், பொதுமக்களிடம் கைகுலுக்கியும் நடந்தே சென்று வாக்கு சேகரித்தார்.
இதையும் படிங்க: உதிப்பது உதயசூரியன்தான்.. திராவிட மாடல் ஆட்சிக்கு எங்கும் ஆதரவு அலை..!! முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு..!!
முதலமைச்சரை காண வழி நெடுகிலும் கூடி நின்ற பொதுமக்களிடம் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்ச ர்அமைச்சர் எ.வே.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சரை அருகில் பார்த்த உற்சாக மிகுதியில் அவருடன் கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். மேலும் காய்கறி மார்க்கெட்டிற்கு சென்ற முதல்-அமைச்சர் அங்கு வியாபாரிகளின் குறைகளை கேட்டறிந்தார். வழிநெடுகிலும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து கைகளை குலுக்கியவாறும், புகைப்படம் எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!