×
 

தொடர்ந்து அத்துமீறும் இலங்கை கடற்படை.. தமிழக மீனவர்களுக்காக முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்..!!

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவது தொடர் பிரச்சினையாக உள்ளது. சமீபத்திய சம்பவமாக, இன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்களும், பாம்பனைச் சேர்ந்த 9 மீனவர்களும் நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் இரண்டு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இலங்கை நீதிமன்றம் இவர்களுக்கு ஆகஸ்ட் 7ம் தேதி வரை நீதிமன்றக் காவல் உத்தரவிட்டுள்ளது. இந்த கைதுகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கின்றன. இலங்கை அரசு, எல்லை மீறல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு கடுமையான அபராதங்களையும், படகுகளை நாட்டுடைமையாக்குவதையும் தொடர்கிறது.

இதையும் படிங்க: மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு இங்கு ஓய்வெடுக்க மனமில்லை.. முதல்வர் மு.க ஸ்டாலின் உருக்கம்..!!

இந்நிலையில் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவது கவலை அளிப்பதாகவும், இது அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் பாதிக்கிறது எனவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த 5 மீனவர்கள் மற்றும் மேலும் 9 பேர் சமீபத்தில் சிறைபிடிக்கப்பட்டதாகவும், 2024ஆம் ஆண்டு முதல் 50 மீனவர்களும் 232 படகுகளும் இலங்கை காவலில் உள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சம்பவங்கள் மீனவர்களின் குடும்பங்களை பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்குவதாகவும், அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீறுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். 

மேலும், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கூட்டு பணிக்குழு கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் எனவும், தூதரக மற்றும் சட்ட உதவிகள் மூலம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மேலும் கைதுகளை தடுக்கவும் மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார். இந்த கடிதம் மீனவர் பிரச்சினையில் தமிழக அரசின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

 

இதையும் படிங்க: விரைவில் உங்களை சந்திக்க உங்கள் ஊர்களுக்கு வருவேன்.. முதல்வர் மு.க ஸ்டாலின்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share